கடந்த சில ஆண்டுகளாக படித்த இளைஞர்கள் மாத சம்பளத்திற்கு வேலை செய்வதைவிட சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இளைஞர்கள் பலர் தொடங்கிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று வருகின்றன.
அந்த வகையில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விரைவில் செயற்கை கோள்களை அனுப்ப உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
இந்தியாவில் இளைஞர்கள் தொடங்கி வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகின்றன என்பதும் ஒரு சில லட்சங்களில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல தற்போது கோடிக்கணக்கில் வருவாய் பார்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செயற்கைக்கோள் தயாரிப்பு
இந்த நிலையில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விரைவில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விரைவில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் என்றும் இது இந்திய விண்வெளி துறையின் ஒரு மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
டெல்லியில் நேற்று நடந்த இந்திய விண்வெளி மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் 'ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயற்கைகோள் மற்றும் ராக்கெட்டுகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த முயற்சி கண்டிப்பாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கள்
இந்த நிகழ்ச்சியில் மேலும் உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள், 'எல்&டி மற்றும் எச்ஏஎல் ஆகிய நிறுவனங்கள் உள்நாட்டில் ஐந்து பிஎஸ்எல்வி ராக்கெட்டுக்களை தயாரித்துள்ளது என்றும், அதேபோல் ஒன்வெப் இஸ்ரோ மற்றும் என்எஸ்ஐஎல் நிறுவனங்களும் தங்கள் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
விண்வெளி துறையில் இந்தியா
ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி காரணமாக தற்போது விண்வெளி துறையில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் புதுமையான சாத்தியங்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் அமைச்சர் ஜிதேந்திர சிங் மேலும் கூறினார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications