இந்தியாவில் ஒட்டுமொத்த மாநிலங்களில் தற்போது ஆட்சிபுரியும் முதலமைச்சர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, மாநில முதல்வர்களின் சொத்து மதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR) இந்த சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.52.59 கோடி ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது
அதன்படி, இந்தியாவின் பணக்கார முதல்வராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இடம்பிடித்துள்ளார். இவர் ரூ. 931 கோடிக்கு மேல் சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார முதல்வர் என்ற இடத்தை பெற்றுள்ளார். அத்துடன் சந்திரபாபுவுக்கு ரூ.10 கோடி அளவுக்கு கடன் இருப்பதாகவும் அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா குண்டு 2வது இடத்திலும், பெமா காண்டுவின் சொத்து மதிப்பு ரூ.332 கோடி ஆகும். கர்நாடக முதல்வர் சித்தராமையா 3வது இடத்திலும் உள்ளனர். சித்தராமையாவின் சொத்து மதிப்பு ரூ.51 கோடி ஆகும். நாட்டின் 31 முதல்வர்களின் மொத்த வருமானம் ரூ.1,630 கோடி என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடைசி இடத்தை பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.15 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், மம்தாவுக்கு முந்தைய இடங்களை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் பினராயி விஜயன் ஆகியோர் பெற்றுள்ளனர். உமர் அப்துல்லா 30-வது இடமும், பினராயி விஜயன் 29-வது இடமும் பெற்றுள்ளனர். உமர் அப்துல்லாவின் சொத்து மதிப்பு ரூ.55 லட்சம் என்றும், பினராயி விஜயனின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பட்டியலில் 14-வது இடம் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.8 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.8,88,75,339 சொத்து வைத்துள்ளார். இவருக்கு எந்தக் கடனும் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் முதல்வர் ஸ்டாலினின் தனிப்பட்ட வருமானமாக ரூ.28 லட்சம் இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.அதேபோல், புதுச்சேரியின் முதல்வர் ரங்கசாமி ரூ.38 கோடி சொத்துக்களுடன் 6-ம் இடம் பிடித்துள்ளார்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு இந்த தகவல்களை மாநில முதல்வர்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த வேட்புமனுக்களில் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தனிநபர் நிகர தேசிய வருமானம் 2023-24ல் சராசரியாக 1,85,854 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதலமைச்சர்களின் சராசரி தனிநபர் வருமானம் ரூ.13,64,310 ஆகும். இது நாட்டின் குடிமக்களின் தனிநபர் வருமானத்தை விட 7.3 மடங்கு அதிகம் ஆகும்.


Click it and Unblock the Notifications