இந்திய பங்குச் சந்தைகளான தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் பாம்பே பங்குச் சந்தை (BSE) டிசம்பர் 25, 2025 வியாழக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மூடப்படும். இது 2025ஆம் ஆண்டின் கடைசி பங்குச் சந்தை விடுமுறை. உலகின் பல முக்கிய சந்தைகளான ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவையும் அந்நாளில் மூடப்படும். இந்த ஒரு நாள் விடுமுறை பங்கு வர்த்தகர்கள், முதலீட்டாளர்களுக்கு திட்டமிடலுக்கு உதவும், குறிப்பாக அடுத்த ஆண்டுக்கான முதலீட்டு திட்டத்தை திட்டமிடமுடியும்.
டிசம்பர் 25இல் பங்கு, டெரிவேடிவ், செக்யூரிட்டீஸ் லெண்டிங் அண்ட் பாரோவிங் (SLB) பிரிவுகளில் வர்த்தகம், செட்டில்மென்ட் நடக்காது. கரன்சி, கமாடிட்டி சந்தைகளும் மூடப்படும். இதனால் டிசம்ப்ர் 24ஆம் தேதி அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளையும் இந்த விடுமுறை பாதிக்கும். முதலீட்டாளர்கள் இந்நாளில் புதிய வர்த்தகம் செய்ய முடியாது.
பங்குச் சந்தை வர்த்தகம் டிசம்பர் 26, 2025 வெள்ளிக்கிழமை முதல் வழக்கம்போல தொடங்கும். அடுத்த விடுமுறை ஜனவரி 26, 2026 குடியரசு தினம்.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தக துவக்கத்தில் 163 புள்ளிகள் உயர்வுடன் 85,687.85 புள்ளிகளை தொட்டு உள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 53 புள்ளிகள் உயர்ந்து 26,229 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகின்றது.
டிசம்பர் 25ஆம் தேதி விடுமுறை காலத்தில் சந்தை மூடியிருப்பதால் முதலீட்டாளர்கள் 2026இக்கான திட்டமிடலை முன்கூட்டியே செய்ய வேண்டும். இது குழப்பம் இல்லாமல் முதலீட்டை பாதுகாக்க இந்த விடுமுறை நாள் உதவும். குறிப்பார பண்டிகை செலவுக்கு முன் உங்க பங்கு போர்ட்ஃபோலியோவை சரிபார்க்கலாம், அதோடு இயர் எண்ட் ரிவ்யூவ் செய்யவும் இந்த விடுமுறை ஏற்றதாக மாறும்.
டிசம்பர் 24 வரை சந்தை இயங்கும். இந்நேரத்தில் தேவையான வாங்குதல், விற்பனை ஆர்டர்களை வைக்கலாம். விடுமுறைக்குப் பிறகு டிசம்பர் 26 முதல் சந்தை தொடங்கும். அதுவரை புதிய வர்த்தகம் செய்ய முடியாது. 2026இல் எதிர்பார்க்கப்படும் பொருளாதார மாற்றங்கள், நிறுவன முடிவுகளை முன்கூட்டியே ஆராயலாம். போர்ட்ஃபோலியோவை மறுசீரமைக்க திட்டமிடலாம். நீண்டகால முதலீடு செய்பவர்கள் விடுமுறையை பயன்படுத்தி சந்தை போக்கை படிக்கலாம்.
டிசம்பர் 25 உலக சந்தைகள் மூடியிருப்பதால் இந்திய சந்தைக்கு நேரடி தாக்கம் குறைவு. முதலீட்டாளர்கள் இதை கவனத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். குறுகியகால வர்த்தகர்கள் விடுமுறைக்கு முன் பொசிஷன்களை மூடலாம்.
2026இல் புதிய பொருளாதார கொள்கைகள், வட்டி விகித மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. விடுமுறை காலத்தில் இதை ஆராயலாம். உங்கள் போர்ட்போலியோவே பல்வகைப்படுத்தலாம், நீண்டகால முதலீடு போன்ற உத்திகளை திட்டமிடலாம்.
கிறிஸ்துமஸ் விடுமுறையில் பங்குச் சந்தை மூடல் முதலீட்டாளர்களுக்கு திட்டமிடல் வாய்ப்பு தருகிறது. டிசம்பர் 25 உலக சந்தைகள் மூடப்படும். விடுமுறைக்கு முன் ஆர்டர்கள் வைக்கலாம். 2026இக்கான நீண்டகால திட்டத்தை வகுக்கலாம். இது முதலீட்டை பாதுகாக்கும். பண்டிகை காலத்தில் கவனமாக திட்டமிடுங்கள். சந்தை தொடங்கிய பிறகு மாற்றங்கள் வரலாம். முன்கூட்டி தயாராக இருங்கள்.


Click it and Unblock the Notifications