இந்திய பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை வர்த்தகம் தடாலடியாக உயர்ந்து பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்திருந்த கூடுதல் வரிகளை 90 நாட்களுக்கு ஒத்திவைத்ததை அடுத்து, உலகளாவிய சந்தைகளில் சாதகமான சூழல் ஏற்பட்டதால், நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் இரண்டும் கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது.
இந்த 90 நாள் கெடு எச்சரிக்கை மணியாக இருந்தாலும், தற்போது அமெரிக்கா - சீனா மத்தியில் நடக்கும் வர்த்தக போர் இந்தியாவுக்கு சாதகமாக அமையலாம் என்ற நிலை உள்ளது. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.

இன்று இந்திய சந்தையில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஆசிய சந்தையிலும் உயர்ந்தது, இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அமெரிக்க பங்குச்சந்தை நேற்றைய வர்த்தகத்தில் அதிகப்படியான சரிவை பதிவு செய்தது. ஆயினும் ஆசிய சந்தை பெரிய அளவிலான உயர்வைப் பதிவு செய்துள்ளது.
இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1,600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 75,467 புள்ளிகளை எட்டியது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 50 குறியீடு 520 புள்ளிகள் உயர்ந்து 22,923 புள்ளிகளை அடைந்தது. இதன் விளைவாக, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 7.2 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல நாடுகளின் மீது விதிக்கப்பட்ட வரிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்ததன் விளைவாக, அமெரிக்கப் பங்குச்சந்தை குறியீடுகள் சரிந்தன. டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 1,049.40 புள்ளிகள் அல்லது 2.58% குறைந்து 39,559.05 புள்ளிகளாகவும், எஸ்&பி 500 குறியீடு 171.37 புள்ளிகள் அல்லது 3.14% குறைந்து 5,285.43 புள்ளிகளாகவும், நாஸ்டாக் காம்போசிட் குறியீடு 648.54 புள்ளிகள் அல்லது 3.79% குறைந்து 16,476.43 புள்ளிகளாகவும் சரிந்தது.
வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தையின் வலுவான வளர்ச்சிக்கு பல முக்கிய காரணிகள் பங்களித்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உட்பட 75 நாடுகளின் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை ஜூலை 9 வரை ஒத்திவைத்தது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்தது. உலகளாவிய வர்த்தக பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த தற்காலிக நிவாரணம் சந்தைகளுக்கு மிகவும் தேவையான ஓய்வை அளித்தது.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவும் சாதகமான முதலீட்டு வாய்ப்புகளை இந்திய சந்தைக்கு கொடுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை இரண்டாவது தொடர்ச்சியான அமர்வில் சரிந்தது, இது பணவீக்க அச்சத்தை உலக நாடுகளில் குறைக்க வழிவகை செய்துள்ளது.
அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவது இந்தியா உட்பட வளர்ந்து வரும் சந்தைகளில் முதலீட்டாளர் நம்பிக்கையை அதிகரித்தது. பலவீனமான டாலர் பொதுவாக இந்திய பங்குகளில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கவும் மற்றும் இந்திய ரூபாயின் மீதான பாதிப்பை குறைக்கும்.
வெள்ளிக்கிழமை, டாலர் குறியீடு ஜூலை 2023-க்கு பின் முதல் முதன்முறையாக 100 க்கு கீழே குறைந்தது. சுவிஸ் பிராங்கிற்கு எதிராக 10 வருட குறைந்த அளவையும், ஜப்பானிய யென்னுக்கு எதிராக ஆறு மாத குறைந்த அளவையும் அமெரிக்க டாலர் எட்டியது. இது உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக 51 பைசா உயர்ந்து 86.17 ஆக இருந்தது.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications