போலி சான்று மூலம் கல்லூரியில் சேர்ந்த இந்திய மாணவர்.. அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்..!
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள லெஹிக் பல்கலைகழகத்தை சேர்ந்த ஒரு தனியார் ஆராய்ச்சி கல்வி நிலையத்தில் இடம் பிடிப்பதற்காக போலி ஆவணங்களை தந்த 19 வயதான இந்திய மாணவர் ஆர்யன் ஆனந்த் பிடிபட்டு இந்தியாவுக்கு அனுப்பப்படுகிறார். 2023-24 கல்வியாண்டில் படிப்பில் சேர்வதற்கு ஆனந்த் இந்த போலி சான்றிதழ்களை தந்துள்ளார்.

ஆர்யன் ஆனந்த் லெஹ்கி பல்கலைக்கழகத்தை சேர்ந்த தனியார் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் 2023-24ஆம் ஆண்டுக்கான படிப்பில் சேர்வதற்காக வி்ண்ணப்பித்துள்ளார். இதற்காக அவர் பல போலி சான்றுகளை சமர்ப்பித்துள்ளார். மேலும் அவரது படிப்புக்காக நிதியுதவிக்கும் போலியான சான்றிதழ்களை தந்துள்ளார்.

போலி சான்று மூலம் கல்லூரியில் சேர்ந்த இந்திய மாணவர்.. அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்..!

இதற்கெல்லாம் மேலாக தனது சொந்த தந்தை மரணமடைந்துவிட்டதால் தனக்கு கல்வி நிதியுதவி அளிக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார். இதற்காக அவருக்கு பெரும் நிதியுதவியும் தருவதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் அவர் மோசடி செய்தது வெளிச்சத்திற்கு வந்த காரணத்தால் ஆனந்துக்கு அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது இந்த ஆண்டுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.

அடுத்த ஆண்டு அவரை அனுமதிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின் அவர் இந்தியாவுக்கு வருகிறார். அவரை அடுத்த ஆண்டில் எந்த சலுகையும் இல்லாமல் படிப்பில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

லெஹிக் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் போலி அனுமதி சான்றிதழ், நிதியுதவி ஆவணங்களை வைத்து படிப்பில் ஆனந்த் சேர்ந்துள்ளார். தனது தந்தை இறந்ததாகக்கூறி கூடுதல் நிதியுதவியைப் பெற்றுள்ளார். இந்த மோசடியை போலீஸார் கண்டுபிடித்து விட்டனர். இதற்காக 25 ஆயிரம் டாலர்கள் அபராதமும் மூன்று மாத சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறைத்தண்டனை முடிந்து விட்டதால் ஆனந்த் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்படுகிறார். படிப்புக்காக நிதியுதவியைப் பெறக்கூடாது என்ற நிபந்தனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. நார்த்தாம்டன் கவுன்டி மாவட்ட அரசு வழக்கறிஞர் ஸ்டீபன் பராட்டா தந்த புகாரின்படி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஆனந்த் ஒரு போலி இமெயில் ஐடியை வைத்து பள்ளி பிரின்ஸிபால் போன்று போலியாக ஆவணங்களை தயாரித்துள்ளார்.

அத்துடன் அவரது தந்தையின் மரண சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், வரி ரசீதுகளையும் ஆனந்த் தயாரித்து அளித்துள்ளார். இதுபற்றி லெஹிக் பல்கலைக்கழகத்துக்கு ஒரு எச்சரிக்கை வந்துள்ளது. அதில் ஆனந்தின் மோசடிகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து லெஹிக் போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். ஆனந்தின் வழக்கு கல்வி மற்றும் நிதிப் பதிவுகளை பொய்யாக்குவது தொடர்பான அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது.

Story Written by: Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+