அமெரிக்காவில் கல்வி பயிலக்கூடிய இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் இண்டர்ன்ஷிப் கூட கிடைக்காமல் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் வேலை வாய்ப்பு சந்தை தற்போது மிகவும் கடினமானதாக மாறியிருப்பதாக அங்கே இருக்கக்கூடிய சர்வதேச மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே பிள்ளைகளை படிப்புக்காக அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கு முன்பு பெற்றோர் ஒரு முறைக்கு பலமுறை தற்போதைய சூழலை ஆய்வு செய்து பார்க்க வேண்டும் என விஜய் திருமலை என்ற ஒரு தொழில் முனைவோர் அறிவுரை வழங்கியுள்ளார்.

அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தற்போது இன்டர்ன்ஷிப் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர் என ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் எடிட்டர் ஸ்மிதா பிரகாஷ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து எந்த சிக்கலும் இல்லாமல் அமெரிக்காவின் பணி புரிவதற்கு உங்களுக்கு அனுமதி இருக்கிறதா என்ற முதல் கேள்வி மாணவர்கள் முன் வைக்கப்படுகிறதாம். இதற்கு இல்லை என பதில் அளிக்கும் மாணவர்களுக்கு நிறுவனங்கள் இண்டர்ன்ஷிப் வழங்க மறுக்கின்றனர் எனக் கூறியிருந்தார்.
அவருடைய இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள திருமலை என்கிற தொழில் முனைவோர் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் தற்போது தங்கள் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் வேண்டி வரக்கூடிய மாணவர்கள் எதிர்காலத்திலும் தங்களோடு இணைந்து பணிபுரியக்கூடிய நிலையில் இருந்தால் மட்டுமே வாய்ப்பு தருகின்றன இல்லை என்றால் அவர்களை ஏற்க மறுத்து விடுகின்றன எனக் கூறியுள்ளார்.
பல லட்சங்களை கொடுத்து தங்களுடைய பிள்ளைகளை அமெரிக்காவில் கல்வி பயில்வதற்காக அனுப்பக்கூடிய பெற்றோர் தற்போதைய பணி சூழல்களை கருத்தில் கொண்டு அந்த முடிவுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
அமெரிக்காவில் சென்று கல்வி பயில்வதற்காக பெற்றோர் 3 லட்சம் டாலர்கள் முதல் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் அப்படி இங்கு வந்து பயில்பவர்களுக்கு படிப்பை முடித்த பிறகு இண்டர்ன்ஷிப் கூட கிடைப்பது கிடையாது என கூறியுள்ளார்.
தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தான் மாணவர்களுக்கு இண்டர்ன்ஷிப் வழங்கும் நடைமுறைகளை மேற்கொள்கின்றன. அந்த வகையில் ஏஐ தொழில்நுட்பம் அந்த நபருக்கு அமெரிக்காவில் நிரந்தரமாக வேலை செய்வதற்கான உரிமம் இல்லை என்றால் உடனடியாக அவரது விண்ணப்பத்தை நிராகரித்து விடுகிறது.
பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை அமெரிக்காவிற்கு பதிலாக மாற்று நாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பது குறித்து யோசிக்கலாம் என தெரிவித்துள்ளார். இவ்வாறு 3 லட்சம் டாலரை கொடுத்து விட்டு வேலை கிடைக்காமல் தவிப்பதற்கு ஈபி5 விசா பெற்று தருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு வழிவகை செய்யக்கூடிய ஒரு விசா தான் இது. அமெரிக்காவில் 8 லட்சம் டாலர்களை முதலீடு செய்து ஒரு தொழிலை உருவாக்கி 30க்கும் அதிகம் வேலை வாய்ப்பினை உருவாக்குபவர்களுக்கு அந்நாட்டு அரசு ஈபி-5 விசா மூலம் நிரந்தர குடியுரிமை வழங்குகிறது. எனவே பெற்றோர் கண்டிப்பாக தங்கள் பிள்ளைகளை அமெரிக்காவிற்கு தான் அனுப்ப வேண்டும் என விரும்பினால் இந்த விசா நடைமுறைக்கு மாறலாம் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வரும்போது மாணவர்கள் தாங்கள் இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே கிரீன் கார்டு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்த விடும் என்றும் இதன் மூலம் அவர்கள் எளிமையாக அமெரிக்காவின் எந்த நிறுவனத்திலும் வேலை வாய்ப்பு பெற்று விட முடியும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications