பெங்களூரு: இந்தியாவில் புதிதாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதை நிறுத்தி வைத்திருந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீண்டும் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளன. 12 முதல் 18 மாதங்களுக்கு பிறகு வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பது இத்துறை சார்ந்து படித்தவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Xpheno என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் மார்ச் மாதத்தில் புதிதாக வேலைக்கு தேவைப்படுபவர்கள் எண்ணிக்கை 1,68,000 ஆக இருந்து, ஏப்ரலில் அது 1,56,000 என்றும் மே மாதத்தில் 1,07,000 என்றும் குறைந்தது. இதனிடையே தற்போது மீண்டும் புதிதாக வேலைக்கு தேவைப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக Xpheno நிறுவனம் கூறுகிறது.

சர்வதேச அளவில் ஐடி துறைகளில் இருந்த மந்த நிலை , ஐடி நிறுவனங்கள் செலவினங்களை குறைத்ததும் ஆகியவையே மார்ச் முதல் மே மாதம் வரை வேலை வாய்ப்புகள் குறைவாக இருந்ததற்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
தற்போது பல்வேறு ஐடி நிறுவனங்களும் மீண்டும் ஃபிரஷர்களை வேலைக்கு எடுப்பதை தொடங்கியுள்ளன. குறிப்பாக கேம்பஸ் மூலம் ஃபிரஷர்களை வேலைக்கு தேர்வு செய்வதை பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன என சொல்லப்படுகிறது. கடந்த இரண்டு முதல் நான்கு காலாண்டுகளாக மந்த நிலையில் இருந்த ஐடி துறை தற்போது அதிலிருந்து மீண்டு வருவதால் புதிதாக வேலைக்கு ஆட்களை தேடுவது அதிகரித்திருப்பதாக naukri.com நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஹித்தேஷ் ஓபராய் தெரிவித்துள்ளார்.
செப்டம்பரில் புதிதாக வேலைக்கு தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை 1,34,000 என உயர்ந்துள்ளது. குறிப்பாக முதல் நிலை நகரங்களில் உள்ள நிறுவனங்கள்தான் 85 சதவீத வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் டெக் மகேந்திரா ஆகிய நிறுவனங்கள் 2025 ஆம் நிதியாண்டில் 81, 000 - 88,000 ஃபிரஷர்களை புதிதாக பணிக்கு அமர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
அதே வேளையில் இந்தியாவில் ஐடி துறையில் ஊதிய உயர்வு ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை இருக்கும் என இந்த நிறுவனங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன. பெரிய நகரங்களில் ஐடி துறை மற்றும் ஸ்டார்ட் அப்களில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இந்த வளர்ச்சி சொல்லும்படி இல்லை என எக்ஸ்பெனோ நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவை பொருத்தவரை 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் 30000 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளன.
தற்போது இந்த நிறுவனங்கள் மீண்டும் புதிதாக வேலை ஆட்களை வேலைக்கு எடுக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்களில் செயல்படக்கூடிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தான் வேலைவாய்ப்புகளை அதிகரித்துள்ளன.
பெங்களூருவில் அதிகபட்சமாக ஸ்டார்ட் அப் நிறுவன வேலைவாப்புகள் 37 சதவீதம் அதிகரித்துள்ளது . குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, மிசின் லேர்னிங் உள்ளிட்ட பிரிவுகளில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் தான் அதிக அளவில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன.
Written by: Devika
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications