ஹெச்1பி விசா: ஆன்சைட்டுக்கு ஊழியர்களை அனுப்புவதை குறைக்கும் இந்திய டெக் நிறுவனங்கள்..!

அமெரிக்கா: டிசிஎஸ் ,விப்ரோ ,இன்ஃபோசிஸ் உள்ளிட்ட இந்தியாவை சேர்ந்த பெரிய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு ஹெச்1பி விசா மூலம் ஊழியர்களை பணிக்கு அனுப்புவதை குறைந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டில் இருக்கும் திறன் மிகுந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்த ஹெச்1பி விசாவையே பயன்படுத்துகின்றன. அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்பத் துறை நிபுணர்கள் பலரும் ஹெச்1பி விசா மூலமாகத்தான் அமெரிக்காவில் வேலை செய்து வருகின்றனர்.

ஹெச்1பி விசா: ஆன்சைட்டுக்கு ஊழியர்களை அனுப்புவதை குறைக்கும் இந்திய டெக் நிறுவனங்கள்..!

இந்நிலையில் அமெரிக்க கொள்கைகளுக்கான தேசிய அறக்கட்டளை என்ற நிறுவனம் ஹெச்1பி விசா விண்ணப்பங்கள் தொடர்பான ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி 2024 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவை சேர்ந்த ஏழு ஐடி நிறுவனங்கள் மொத்தம் 7,299 ஹெச்1பி விசாக்களுக்கு மட்டுமே விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் அனுமதி பெறப்பட்ட ஹெச்1பி விசாக்களில் இது 5.2% தான் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

அமேசான் நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் 6,396 ஹெச்1பி அனுமதிகளை பெற்றிருந்ததாம் அதுவே 2023இல் 4,052 என்றும் 2024 ஆம் ஆண்டில் 3 , 871 என்றும் குறைந்துள்ளது. காக்னிசெண்ட் நிறுவனம் 2837 , இன்ஃபோசிஸ் 2504, டிசிஎஸ் 1452, ஐபிஎம் 1348, மைக்ரோசாப்ட் 1264, ஹெச்சிஎல் அமெரிக்கா 1248, கூகுள் 1058, கேப் ஜெமினி 1041 ,மெட்டா 920 என்ற எண்ணிக்கையில் தான் ஹெச்1பி விசாக்களை பெற்று ஊழியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளன.

அதே வேளையில் எலான் மஸ்குக்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் முன்பை விட இரண்டு மடங்கு அதிகமாக ஹெச்1பி விசா அப்ரூவல் பெற்றுள்ளது. 2022இல் 337 பேர் , 2023இல் 328 பேர் என இருந்த இந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 742 என உயர்ந்துள்ளது. குறிப்பாக டெஸ்லா நிறுவனம் தங்களுடைய உற்பத்தி, ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவுகளில் அதிக ஊழியர்களை ஹெச்1பி விசா மூலம் வரவழைத்து பணிக்கு அமர்த்தியுள்ளது.

டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஹெச்1பி விசா மூலம் ஊழியர்களை அமெரிக்காவில் பணிக்கு அமர்த்தும் அளவு 56 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க தொடங்கி இருப்பதே டெக் நிறுவனங்களின் இந்த முடிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற பிறகு கடுமையான குடியேற்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்துவார் என சொல்லப்படுவதால் இந்த எண்ணிக்கை இன்னும் குறைய வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+