அமெரிக்காவுக்காக பணிபுரியும் இந்திய தொழில்நுட்ப துறை நிறுவனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வருகிறது.
கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி 2 லட்சத்துக்கும் அதிகமான இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் அமெரிக்காவுக்காக பணி புரிவதாகவும் அவர்களின் சராசரி சம்பளம் 85 லட்ச ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு இந்திய தொழில்நுட்ப துறை ஒரு விதத்தில் உதவி செய்து வருகின்றன என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
207,000 ஐடி ஊழியர்கள்
இந்திய தொழில்நுட்ப துறையில் கடந்த ஆண்டு அமெரிக்காவில் 207,000 பேர் நேரடியாகப் பணியமர்த்தப்பட்டதாக நாஸ்காம் அறிக்கை தெரிவித்துள்ளது. அவர்களுக்கான சராசரி ஊதியம் 2021ஆம் ஆண்டு $106,360 என்றும் இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 85 லட்ச ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பொருளாதாரம்
இந்திய தொழில்நுட்பத் துறையின் நேரடித் தாக்கம் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் மொத்தம் 396 பில்லியன் டாலர் விற்பனையை உருவாக்க உதவியுள்ளது. 1.6 மில்லியன் வேலைகளை இந்திய தொழில்நுட்ப துறை செய்வதால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு $198 பில்லியனுக்கும் அதிகமாக பெற்றுள்ளது. இது 2021ஆம் ஆண்டு 20 அமெரிக்க மாநிலங்களின் ஒருங்கிணைந்த பொருளாதாரங்களை விட அதிகமான தொகை ஆகும்.
500 நிறுவனங்கள்
"இந்திய தொழில்நுட்ப துறையில் நிறுவனங்கள் உலகம் முழுவதிலும் உள்ள 500 நிறுவனங்களில் 75% க்கும் அதிகமான நிறுவனங்களுடன் வேலை செய்கிறது. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளன. எனவே டிஜிட்டல் யுகத்தின் முக்கியமான சவால்களைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றை சந்திப்பதற்கும் நன்கு தயாராக உள்ளன" என்று நாஸ்காம் தலைவர் டெப்ஜானி கோஷ் கூறியுள்ளார்.
$1.1 பில்லியனுக்கும் அதிகமான பங்களிப்பு
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் $1.1 பில்லியனுக்கும் அதிகமான பங்களிப்பை அளித்துள்ளதாகவும், அமெரிக்காவில் உள்ள 180 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், சமூகக் கல்லூரிகள் மற்றும் பிறவற்றுடன் கூட்டணிகளை உருவாக்கியுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாஸ்காம் தலைவர்
உள்ளூர் முதலீடுகள், தொழிலாளர் சக்தியை அதிகரித்தல், மற்றும் உள்ளூர் பணியாளர்களுக்கு திறன் மேம்பாடு ஆகியவற்றை செயல்படுத்துவதன் மூலம் இந்திய தொழில்நுட்ப துறை அமெரிக்க பொருளாதாரத்திற்கு முக்கியமான பங்களிப்புகளை செய்கிறது என்று நாஸ்காம் தலைவர் கோஷ் கூறினார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications