கடந்த 15 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 40 வயது இந்திய மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது வேலை இழந்த அனுபவத்தையும், அதில் இருந்து தான் கற்றுக்கொண்ட பாடங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ரெடிட் தளத்தில், "இது மிகவும் பொதுவான கதைதான். இப்போது நானும் அதை அனுபவித்து வருகிறேன்" என்று எழுதியுள்ளார்.
அவர் பணிபுரிந்த நிறுவனம் பலமுறை பெயர் மாற்றப்பட்டு, குறிப்பாக கொரோனா தொற்றுக்குப் பிறகு நிதி பெறுவதற்காக கடுமையாக முயற்சித்தது. நிலைமை நம்பிக்கைக்குரியதாக தெரிந்தாலும், ஜூலை மாதத்தில் நிதி கிடைக்கவில்லை என்ற கெட்ட செய்தி வந்தது என்று அவர் கூறியுள்ளார்.

இதன் விளைவாக, அவரது மேலாளர் முதலில் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில், இவரும் அதிகாரப்பூர்வமாக பணிநீக்கம் செய்யப்படாமல், ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். இந்த 15 ஆண்டுகளில் நான் ஒன்றிரண்டு நேர்காணல்களுக்கு மட்டுமே சென்றேன். நான் வேலையில் பாதுகாப்பாகவும், சவால்களுடன் பணியாற்றிக் கொண்டிருந்ததாலும் அங்கேயே நீடித்தேன்.
நான் கடுமையாக உழைத்தாலும், அங்கீகாரம் குறைவாகவே இருந்தது. அதை நான் இவ்வளவு நாள் பொறுத்துக் கொண்டேன். ஆனால், இப்போதுதான் அதன் வலி தெரிகிறது" என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வேலை தேடும் நிலைக்குத் தள்ளப்பட்ட இவர், இதுவரை 60 முதல் 70 நிறுவனங்களுக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், சில நிராகரிப்புகள் தவிர, மற்ற நிறுவனங்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இந்த அமைதி, தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சவால்கள் இருந்தபோதிலும், மற்றவர்களுக்கு உதவும் வகையில் 12 முக்கியமான பாடங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். நீங்கள் எந்த நேரத்திலும் மாற்றப்படலாம். வெறும் திறமை மட்டும் போதாது, வியாபாரமே முக்கியம். ஒரே இடத்தில் நீண்ட காலம் வேலை செய்யாதீர்கள். நிறுவனத்தின் கொள்கைகள் குறித்து மேலாளர்களுடன் தொடர்ந்து பேசுங்கள்.
புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். வளர்ச்சி இருந்தால் மட்டுமே கடினமாக உழையுங்கள். அவ்வப்போது நேர்காணல்களுக்குச் சென்று உங்கள் திறமையின் மதிப்பை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் வேலை குறித்த சாதனைகள், கற்றல்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்துங்கள்.
உங்கள் சுயவிவரம் மற்றும் லிங்க்ட்இன் கணக்கை 6-12 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளுங்கள். உங்கள் தொழில்முறை நெட்வொர்க்கை வளர்த்துக் கொள்ளுங்கள்; அது எதிர்காலத்தில் உதவும். உங்கள் திறமைக்கு ஏற்ற வேலைகளுக்கும், சவாலான வேலைகளுக்கும் விண்ணப்பியுங்கள்.
நேர்காணலுக்குப் பிறகு எப்போதும் கருத்துக்களைக் கேளுங்கள். உங்கள் வேலை உங்கள் அடையாளம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் இன்னும் வேலை பெறவில்லை. ஆனால், இந்த ஆலோசனைகள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். நான் பதற்றப்படவில்லை. நிம்மதியாக இருக்கிறேன். இரவில் சில சமயங்களில் மன அழுத்தம் வந்தாலும், அதை எதிர்த்துப் போராடி வருகிறேன். எனது மனைவி எனக்குப் பெரிய ஆதரவாக இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
விரைவில் 40 வயதை எட்டும் இவர், இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கும் என நம்புவதாக கூறியுள்ளார். அவரது இந்த வைரல் பதிவுக்கு, பலரும் தங்கள் ஆதரவையும், அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். ஒரு பயனர், "நிறுவனம் குடும்பம் போன்றது என்று நினைக்காதீர்கள். நம்முடைய உண்மையான குடும்பம் வீட்டில் உள்ளது. எப்போதும் மாற்றத்திற்குத் தயாராக இருங்கள்" என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications