மெட்டா ஃபேஸ்புக்கின் பணிநீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இந்தியர் ஒருவர் 3 மாதங்களுக்குப் பிறகு ஃபோன்பே இந்தியாவில் தனக்கு வேலை கிடைத்துள்ளதை அவரின் LinkedIn பதிவில் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த இடைப்பட்ட காலம் எவ்வளவு மோசமாக இருந்துள்ளது என்பது தான் இவருடைய பதிவின் மையமாக உள்ளது. 3 நாளில் நடந்த சோகம்.
மெட்டா ஃபேஸ்புக் பணிநீக்கம்!
ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நவம்பர் 2022 இல் சுமார் 11,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஒரே அடியாக பணிநீக்கம் செய்தது. அந்த பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் இந்தியர் பலர் இருந்தாலும், ஒரு இந்தியரின் கதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
3 நாட்களுக்கு முன் கலைந்த கனவு!
பல மாதங்கள் விசா போன்ற அனைத்தும் கிளியராகி, கனடா சென்று மெட்டா நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த முன்று நாட்களில் தான் பணிநீக்கம் செய்யப்பட்டதை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார் விஸ்வஜீத் ஜா எனும் இந்தியர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இவர் தனது புதிய வேலைக்காக இந்தியாவில் இருந்து கனடாவுக்கு இடம் பெயர்ந்தவர் என்பது தான் சோகமே.
LinkedIn பதிவு!
பணிக்காக இந்தியாவிலிருந்து கனடா சென்று பணிநீக்கம் செய்யப்பட்டவுடன் அவர் லிங்க்ட்-இன் பதிவில் அவரின் நிலையை விவரித்து இந்தியா அல்லது கனடாவில் ஏதேனும் மென்பொறியாளர் பணி இருந்தால் சொல்லவும், அது தனக்கு உதவியாக இருக்கும் எனக் கூறியிருந்தார்.
ஹேப்பி எண்டிங்!
இந்நிலையில் அதே நபர் அவரின் லிங்க்ட்-இன் பதிவில் மெட்டாவில் பணிநீக்கம் செய்யப்பட்டு நான்கு மாதங்கள் கழித்து இந்தியாவின் PhonePe நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக தனது புதிய பதவியை தொடங்குவதாகவும் இச்செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாகவும் தற்போது பதிவிட்டுள்ளார்.
ஆனால் எல்லாருக்கும் ஹேப்பி எண்டிங் இல்லை!
மெட்டாவால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்ததா என்றால் இல்லை. பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இரண்டாம் கட்ட பணிநீக்க அறிவிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பலரும் இன்னும் வேலைக் கிடைக்காமல் தடுமாறியும் வருகின்றனர்.
டெக் நிறுவனங்கள் பணிநீக்கம்!
உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக, அனைத்து IT நிறுவனங்களும் செலவீனத்தை குறைக்கும் நோக்கில் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்களில் பாதி பேரை பணிநீக்கம் செய்தது. அதை தொடர்ந்து, இந்திய ஊழியர்களை மொத்தமாக பணிநீக்கம் செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
அதேபோல இந்த ஆண்டு கூகுள் நிறுவனம் உலக அளவில் அதன் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததுதான் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
11,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
அமேசான், கூகுள் போல ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிறுவனத்தின் வரிசையில் மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டாவும் இடம் பெற்றது. அதுவும் சென்ற ஆண்டு ஆட்குறைப்பின் முதல் கட்டமாக 12,000 ஊழியர்களை ஒரே அடியாக பணிநீக்கம் செய்தது.
பணிநீக்கங்கள் ஓய்வதில்லை!
முதல் ரவுண்டு பணிநீக்கங்களே இன்னும் தொடர்ந்து வரும் நிலையில்,மிகப்பெரும் அளவிலான இரண்டாம் ரவுண்டு பணிநீக்கத்தை துவங்கி வைத்துள்ளது மெட்டா நிறுவனம். இது குறித்து பேசியுள்ள மெட்டா நிறுவனத்தின் சிஇஓ-வான மார்க் ஜூக்கர்பெர்க், எங்களது பணியாளர் எண்ணிக்கையில் இதுவரை நிரப்பப்படாத 5000 இடங்களையும் சேர்த்து 10,000 பணியிடங்களையும் குறைக்க உள்ளதாக கூறியுள்ளார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications