13 ஆண்டு காலம் அமெரிக்காவில் வேலை செய்து வந்த ஒரு தொழில்நுட்ப நிபுணர் பெங்களூருக்கு குடும்பத்துடன் தான் இடம்பெயர இருப்பதாகவும் மாதம்தோறும் 3.5 லட்சம் ரூபாய் வாடகைக்கு பெங்களூருவில் தான் வீடு பார்ப்பதாகவும் வெளியிட்டு இருக்கும் பதிவு சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
ரெடிட் தளத்தில் ஒரு தொழில்நுட்ப நிபுணர் வெளியிட்டுள்ள பதிவில் நான் கடந்த 13 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு 39 வயது ஆகிறது, நான் பணி அழுத்தம் மிகுந்த வேலையிலிருந்து வெளிவர வேண்டும் குடும்பத்தினருடன் கூடுதல் நேரத்தில் செலவிட வேண்டும் என விரும்புகிறேன். இதற்காக நான் அமெரிக்காவிலிருந்து பெங்களூருக்கு குடிபெயர விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

தன்னுடைய மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் பெங்களூருக்கு வர இருப்பதாகவும் மாதத்திற்கு 3.5 லட்சம் ரூபாய் வாடகைக்கு வீடு பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே நான் வேலை வேலை என வேலைக்காகவே பெரும்பாலான நேரத்தை செலவிட்டு விட்டேன் என தெரிவித்துள்ளார்.
இப்போது என்னிடம் இந்தியாவில் வந்து வசிப்பதற்கு தேவையான நிதி இருக்கிறது. பகுதி அளவு வருமானம் வருவதற்கான ஏற்பாடுகளையும் நான் செய்து விட்டேன் எனவே நான் இந்தியாவிற்கு வந்து என் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
அதிக சம்பளம் தரக்கூடிய ஒரு வேலை வாய்ப்பை கைவிடுவது என்பது நிதி ரீதியாக எனக்கு சில சிக்கல்களை தரும் , ஆனால் இப்போது நான் என்னுடைய நலனுக்கும் என்னுடைய குடும்பத்தினரின் நலனுக்கும் தான் முக்கியத்துவம் தர விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். வர்தூர் பகுதியில் 4 படுக்கை அறை கொண்ட அப்பார்ட்மெண்ட் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஹைதராபாத் அல்லது புனே ஆகிய நகரங்களிலும் குடியமர தான் தயார் என கூறியிருக்கிறார்.
என்னுடைய மனைவி அமெரிக்காவை சேர்ந்தவர் , என்னுடைய பிள்ளைகளும் வெளிநாட்டவர் போலவே இருப்பார்கள் இந்திய சமூகமும் இந்திய பள்ளிகளும் அவர்களை எவ்வாறு கையாள போகின்றன என்பதை நினைத்தால் தான் சற்று குழப்பமாக இருக்கிறது என கூறி இருக்கிறார். வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்து தங்கி இருப்பவர் என்னென்ன சவால்களை சந்திக்கிறீர்கள் என்பதை தயவு செய்து எனக்கு கூறுங்கள் உங்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வேலையை விட்டுவிட்டு இந்தியா வருவதற்கு பதிலாக அமெரிக்காவிலேயே ஒரு புறநகர் பகுதியில் நீங்கள் வசிக்கலாமே என ஒரு பயனர் யோசனை தெரிவித்துள்ளார். நான் ஐரோப்பாவை சேர்ந்த பெண்மணி இந்தியாவிற்கு வந்ததிலிருந்து இங்கிருக்கும் மக்கள் என்னை பார்க்கும் பார்வை குறிப்பாக வித்தியாசமாக இருக்கிறது, இந்த மக்களோடு ஒருங்கிணைவது சவாலாக இருக்கிறது என தெரிவித்துள்ளார் . இங்கே இருக்கும் கலாச்சார வித்தியாசங்கள் உங்களுடைய மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சற்று பிரச்சினை ஏற்படுத்தலாம் ஆனால் சில நாட்களில் அவை சரியாக விடும் ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications