பல இளைஞர்களின் கனவு என்னவோ வெளிநாட்டில் படித்துவிட்டு அங்கேயே பணிபுரிய வேண்டும் என்பதுதான். அப்படிதான் இந்தியாவைச் சேர்ந்த டெக்கி ஒருவர் கல்வி கடன் பெற்று விட்டு அமெரிக்காவிற்கு படிக்கச் சென்றுள்ளார். அங்கு சென்று படிப்பை முடித்துவிட்டு அங்கேயே ஒரு பணியில் சேர வேண்டும் என்று எண்ணியுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அவருக்கு எந்தவித பணியும் கிடைக்கவில்லை. இதனால் இந்தியாவிற்கு திரும்பி தற்போது ரூ. 40 லட்சம் கல்விக் கடனை அடைக்க முடியாமல் திண்டாடி வருகிறார்.
அமெரிக்காவில் உயர்கல்வி கற்றால் நல்ல வேலை கிடைத்து செட்டில் ஆகிவிடலாம் என்று நம்பி ரூ.40 லட்சம் கடன் பெற்று அதை அடைக்க முடியாமல் திணறும் இளைஞரின் கதை தான் ரெட்டிட்டில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விசா வரம்புகள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு இன்டெர்ன்ஷிப் இல்லாதது போன்ற சில காரணங்களால் அந்த டேக்கி வெளிநாட்டில் வேலை பெற முடியவில்லை. இப்போது இந்தியாவிற்கு திரும்பி இருக்கும் இவருக்கு மாதத்திற்கு ரூ. 75,000 சம்பளம் வழங்கும் ஒரு வேலை இருக்கிறது. ஆனால் அவர் பெற்ற கல்வி கடனுக்கான ஈஎம்ஐ மாதம் ரூ. 66,000. அப்படி இருக்கையில் அவருக்கு ரூ.9,000 மட்டுமே மிச்சமாகும். "இந்த காரணத்தினால் இந்தியாவிற்கு திரும்பிவிட்டேன்! கடனில் மூழ்கி விட்டேன்! என்ன செய்வது? என்றே எனக்கு தெரியவில்லை", என்று அந்த இளைஞர் தனது ரெட்டிட் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் இளங்கலை படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவிற்கு சென்று முதுகலை பட்டம் பெறுவதற்காக ரூ.40 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அவருடைய தந்தை ஒரு சிறு வணிகத்தை நடத்தி வருபவர் என்று கூறப்படுகிறது. குடும்பத்தினருடன் சேர்ந்து சிறந்த எதிர்காலத்திற்கான கனவை நினைவாக்க இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்துள்ளார். அதன் பின் அமெரிக்காவிற்கு சென்று மேனேஜ்மென்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸில் முதுகலை பட்டம் பெற்றார்.
பின்னர் டாலர்களில் சம்பளம் வாங்கும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 1 வருடம் அமெரிக்காவில் வேலைகளுக்கு இடைவிடாமல் விண்ணப்பித்த போதிலும்.. எந்த ஒரு வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை. இதற்கிடையில் தனது வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்டவும் பெரும் போராட்டங்களை சந்தித்துள்ளார். அவருடைய குடும்பத்தினர் அவருக்கு இந்தியாவிலிருந்து பணம் அனுப்பி தங்களுடைய சேமிப்பின் கடைசிவரை அவருக்காக செலவிட்டுள்ளனர்.
அதுவரையில் சிறு வணிகம் செய்து பிழைப்பு நடத்தி வந்த இந்த டெக்கியின் தந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவருடைய வணிகமும் கடும் நஷ்டத்தை சந்திக்கத் தொடங்கியது. இந்த காரணத்தினால் மனம் உடைந்து வேலையில்லாமல் என் தலையில் ஒரு பெரிய கடனுடன் இந்தியாவுக்கு திரும்ப வேண்டியதாயிற்று என்று அவர் ரெட்டிட்டில் எழுதியிருந்தார்.
இந்தியாவிற்கு திரும்பியிருக்கும் அவர் தனது வேலை தேடலை மீண்டும் தொடங்கியுள்ளார். பல மாதங்கள் தேடிய பிறகு தற்போது மாதத்திற்கு ரூ.75,000 சம்பாதிக்கும் ஒரு வேலை கிடைத்துள்ளது. அதில் ரூ. 66,000 ரூபாயை தனது கடனை திருப்பிச் செலுத்த செலவிடுகிறார். அவருடைய பதிவு புலம்பெயர்ந்தோர் சந்திக்கக்கூடிய பிரச்சனையை பற்றி தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
ஒவ்வொரு எட்டு மாதங்களுக்கும் ஒரு முறை வெவ்வேறு நிறுவனங்களுக்கு மாறுவது சிறந்த வழி என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்திருந்தார். திறமையை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். கடுமையாக உழையுங்கள். வேலைகளை அடிக்கடி மாற்றுங்கள்! நீங்கள் லட்சியமாக இருந்தால் இதை செய்து முடிக்கலாம். இப்போது வேண்டுமானால் கடுமையாக இருக்கலாம். ஆனால் பிற்காலத்தில் கண்டிப்பாக சிறப்பாக மாறும், என்று ஒரு பயனர் தெரிவித்திருந்தார்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications