சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஐடி துறையானது பெரும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக டெக் ஜாம்பவான்கள் ஆன கூகுள் தொடங்கி மைக்ரோசாப்ட் வரையில் பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்கம் செய்துள்ளன.
இன்னும் சில நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையினை தொடர்ந்து வருகின்றன. இது நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், தேவையானது சரிவினைக் கண்டுள்ளது.
நிறுவனங்கள் ஐடி-க்காக செலவிடும் தொகையை குறைத்துள்ளன. ஆக இதன் காரணமாக ஐடி துறையில் தேவை என்பதும் சரிவினைக் கண்டு வருகின்றது.
நாஸ்காம் கணிப்பு
இதற்கிடையில் இந்திய ஐடி துறையை சேர்ந்த அமைப்பான நாஸ்காம், நடப்பு நிதியாண்டில் 8.4% வளர்ச்சி கண்டு 245 பில்லியன் டாலர் அளவுக்கு வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது கடந்த ஆண்டில் இத்துறையில் வருவாய் விகிதமானது 226 பில்லியன் டாலர் அளவுக்கு இருந்தது.
கணிப்பது கடினம்
நாஸ்காமின் தலைவர் தேப்ஜானி கோஷ், 2024ம் நிதியாண்டில் வளர்ச்சியானது கணிப்பது கடினம் என்று கூறினார். ஆனால் புதிய நிதியாண்டில் எச்சரிக்கையுடன் நம்பிக்கையுடன் இருப்பதாக தலைமை நிர்வாகிகளின் கருத்துகளை சுட்டிக் காட்டினார்.
2030-ல் எப்படி?
இந்த துறையில் 2.90 லட்சம் புதிய வேலைகள் சேர்க்கப்பட்டு ஒட்டுமொத்த எண்ணிக்கையை 84 லட்சமாக உயர்த்தியுள்ளது.
ஐடி துறையில் உள்ள முதல் ஐந்து நிறுவனங்கள் 18 பில்லியன் டாலர் அளவுக்கு வலுவான ஒப்பந்தத்தினை கொண்டுள்ளன. இதற்கிடையில் 2030ம் ஆண்டிற்குள் 500 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு தொழில் துறையாக அதன் பாதையில் உள்ளது.
பணி நீக்கம் அதிகரிப்பு
தொடர்ந்து சர்வதேச அளவில் பல்வேறு தலைவலிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அரசியல் பதற்றம் என்பது தொடர்ந்து இருந்து வருகின்றது. குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையானது அதிகரித்து வரும் நிலையில், வேலையின்மை என்பது அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தான் சமீபத்திய காலமாகவே பணி நீக்கம் என்பது அதிகரித்துள்ளது.
நல்ல விஷயம்
மொத்தத்தில் ஐடி துறையில் பல்வேறு காரணிகளுக்க மத்தியில், தற்போதைக்கு வளர்ச்சி விகிதம் என்பது தடுமாற்றத்தில் இருந்தாலும், மீண்டும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம். இது மீண்டும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ஊக்குவிக்கலாம். இது ஊழியர்களுக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications