அதிரடி முடிவுவெடுத்த இந்திய வர்த்தகர்கள்.. சபாஷ் சாணக்கியா..!

டெல்லி: ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் கொடி கட்டி பறந்து வரும் அமேசான், இந்தியாவில் தனது காலை சற்று பலமாகவே ஊன்றியுள்ளது என கூறலாம்.

ஆனால் அமேசான் உள்ளிட்ட சில ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களால் பெருத்த அடி வாங்கியுள்ள இந்திய சில்லறை வணிகர்கள், இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற பயத்தில் உறைந்து போயுள்ளனர்.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக கொடி பிடிக்க ஆரம்பித்துள்ளனர் இந்தியாவிலுள்ள சிறு வர்த்தகர்கள்.

வலுக்கும் எதிர்ப்பு

வலுக்கும் எதிர்ப்பு

அமேசான் மற்றும் வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட் நிறுவனங்கள் மிக அதிகமான தள்ளுபடியையும், பலத்த சலுகைகளையும் தொடர்ந்து அளித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் இந்திய சில்லறை வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் வலுவான எதிர்ப்புகள் உள்ள நிலையில், ஜெஃப் பேசோஸ் இந்தியா வருகையின் போது சிறு வணிகர்கள் அவருக்கு எதிராக கொடி பிடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கடுமையான விதிமுறைகள்

கடுமையான விதிமுறைகள்

ஏற்கனவே வர்த்தகர்களின் கடும் எதிர்ப்பால் மத்திய அரசு, கடந்த ஆண்டே இந்த நிறுவனங்களுக்கான விதிமுறைகளை மிகக் கடுமையாக்கியது. இந்த கடுமையான விதிமுறைகள் அந்த நிறுவனங்களின் விற்பனையாளர்களின் தயாரிப்புகளை வழங்குவதையும் தடை செய்யும் விதத்தில் அமைந்தன. எனினும் இன்று வரையில் ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களின் அதிரடியான சலுகைகள் குறைந்த பாடாக இல்லை.

எதை பற்றி பேச போகிறார்?

எதை பற்றி பேச போகிறார்?

இந்தியாவில் நிலவி வரும் சற்று கடுமையான விதிமுறைகளை தளர்த்துவது பேசப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சிறு குறு நிறுவனங்களுடன் இணைக்கும் நோக்கில் புதுடெல்லியில் நடவிருக்கும் விழாவில் இருப்பாதாகவும், இதில் தான் அமேசான் நிறுவனர் பங்கேற்கிறார் என்றும் கூறப்படுகிறது.

முக்கிய புள்ளிகளை சந்திக்கும் ஜெஃப்

முக்கிய புள்ளிகளை சந்திக்கும் ஜெஃப்

விழாவில் பங்கேற்கும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸ், அரசின் முக்கிய உயர் அதிகாரிகளையும், பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க அவர் கோரியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக இந்த சந்திப்பு ஈ-காமர்ஸை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகவல்கள் எதுவும் தெரியவில்லை

தகவல்கள் எதுவும் தெரியவில்லை

இது தவிர முக்கிய தொழில் துறையினரையும் சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் பேசோஸ் எப்போது வருகிறார். எங்கே தங்க இருக்கிறார். எத்தனை நாள் தங்கி இருப்பார் என்ற பல தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இது குறித்தான கேள்விக்கும் அமேசான் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் லைவ் மிண்டில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எதை பற்றி பேச போகிறார்?

எதை பற்றி பேச போகிறார்?

அரசின் கடுமையான விதிமுறைகளுக்கு மத்தியில் இந்த ஆன்லைன் சில்லறை நிறுவனங்கள் சற்று பாதிக்கப்பட்டுள்ளன என்பது அப்பட்டமான உண்மையே. ஆக இந்த விதிமுறைகளை தளர்த்த கோரிக்கை வைக்கப்படலாம். மேலும் இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

எதிர்க்கும் நகரங்கள்

எதிர்க்கும் நகரங்கள்

ஜெஃப் பேசோஸின் வருகையை எதிர்த்து 70 மில்லியன் வர்த்தகர்கள் சுமார் 300 நகரங்களில் உள்ள சிறு குறு வணிகர்கள் எதிர்ப்பதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் ஆழ்ந்த தள்ளுபடிகளை கொடுத்து விதிகளை மீறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளன. கடந்த 2015லியே CAIT போராட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆன்லைன் சில்லறை நிறுவனங்கள் மறுப்பு

ஆன்லைன் சில்லறை நிறுவனங்கள் மறுப்பு

எனினும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன. இது அமேசான் கூறிய அறிக்கையில் அமேசான் ஆயிரக்கணக்கான விற்பனையாளர்கள், நெசவாளர்கள், பெண்கள், தொழில் முனைவோருக்கு வணிக வாய்ப்புகளை வழங்கி வருவதாக கூறியிருந்தது. ஆனால் CAIT அதைப் பற்றி உறுதியாக இல்லை.

எங்கெங்கு போராட்டம்?

எங்கெங்கு போராட்டம்?

முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கல்கத்தா உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும், சிறு நகரங்களிலும் பேசோஸூக்கு எதிராக பேரணிகளை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். மேலும் இந்த போராட்டத்தில் 1 லட்சம் வர்த்தகர்களை திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நியாயமற்ற தள்ளுபடி

நியாயமற்ற தள்ளுபடி

இந்த ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் வழங்கி வரும் ஆழ்ந்த தள்ளுபடிகள், தங்கள் வணிகத்தை பாதித்துள்ளதாகவும் வணிகர்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், இப்படி போராட்டம் வெடிக்க உள்ளது. இந்திய அரசு இந்திய வணிகர்களின் எதிர்காலத்தை கருத்தில் கோண்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+