பாலி இந்தியர்கள் அனைவரும் ஒரு முறையாவது சென்று சுற்றி பார்க்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு இடம். அதன் அற்புதமான இயற்கை அழகு, வண்ணமயமான கலாச்சாரம் மற்றும் குறைந்த செலவில் கிடைக்கும் அனுபவங்கள் தொடர்ந்து இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த வண்ணம் உள்ளது. தம்பதிகள், நண்பர்கள், தனி நபர்கள் என பலருக்கும் பாலி ஒரு பிரபலமான தேர்வாக இருந்து வருகிறது. இந்த தீவின் முக்கிய அம்சமே குறைந்த செலவுதான்.
சமூக ஊடக தளங்களில் ஏராளமான வீடியோக்களில் சிலர் குறைந்த செலவில் பாலியை சுற்றி பார்த்த தங்களுடைய அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளனர். அப்படித்தான் இந்தியாவைச் சேர்ந்த கண்டென்ட் கிரியேட்டரான ஆகாஷ் சவுத்ரி என்ற நபர் சமீபத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது. காரணம் இவர் பாலியில் 1,000 ரூபாய்க்கு என்னென்ன வாங்கலாம் என்பதை வீடியோவாக எடுத்து பதிவிட்டிருக்கிறார்.

1,000 ரூபாயில் ஷாப்பிங்: முதலில் ஆகாஷ் தன்னுடைய வீடியோவில் 1,000 ரூபாயை இந்தோனேசிய ரூபாயாக மாற்றுகிறார். அதாவது மே மாத நிலவரப்படி 1,000 ரூபாய்க்கு 1.89 லட்சம் இந்தோனேசிய கரன்சியை பெறுகிறார். பாலியின் குறைந்த செலவை எடுத்துக்காட்டும் வகையில் 3,500 கொடுத்து ஒரு தண்ணீர் பாட்டில் வாங்குகிறார், அதன்பிறகு 20,000 ரூபாய்க்கு ஒரு காபி, மேலும் இன்னொரு பொருளை சற்று பேரம் பேசி 30,000 ரூபாயை கொடுத்து வாங்குகிறார். அதன் பிறகு ஆகாஷ் ஒரு மதிய உணவை சாப்பிடுவதற்காக கடைக்கு செல்கிறார். ஒரு பீர், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை வாங்கி விட்டு மேலும் 20,000 ரூபாயை மீதம் வைத்திருக்கிறார்.
8 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ ஆன்லைனில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. சமூக ஊடக தளங்களில் பலரும் பாலியின் விலைவாசி மற்றும் ஆகாஷின் புத்திசாலித்தனமான பட்ஜெட்டை கண்டு வியப்படைந்தனர். ஒரு பயனர் இது ஆச்சரியமாக இருக்கிறது.. பட்ஜெட்டில் பயணிப்பவர்களுக்கு பாலி சரியான இடமாக தெரிகிறது என்று பதிவிட்டு இருந்தார். நான் பாலிக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறேன் என்று மற்றொரு பயனர் கமெண்ட் செய்திருந்தார். சிலர் மலிவு விலையை பாராட்டி இருந்தாலும் மெட்ரோ நகரங்களில் சிலர் காபிக்கு 1000 ரூபாயை செலவு செய்கின்றனர் என்று நகைச்சுவையாக பதிவிட்டு இருந்தனர்.


Click it and Unblock the Notifications