உலகின் அடுத்த மிகப்பெரும் சந்தை ஆப்பிரிக்கா என்பதால் வல்லரசுகள் பலவும் அங்கே கவனத்தை செலுத்தி வருகின்றன. மக்கள் தொகை பெருக்கம், நில, கனிமவாளம் அனைத்தும் அங்கே உள்ளன. ஆப்பிரிக்க மண்ணில் இந்திய நிறுவனங்கள் ஆதிக்கம் செய்யும் கதையை நியன்டர் தனது சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பது போக்குவரத்து. வடக்கு ஆப்பிரிக்காவில் சாலை வசதிகள் போதுமான அளவில் இல்லை. பல கிராமப்புற பகுதிகளில், சாலைகள் மோசமாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும். ஆண்டுக்கு சில மாதங்கள் கனமழை பெய்யும்போது, சாலைகள் சேதமடைந்து, போக்குவரத்து முற்றிலுமாக தடைபடும்.

ஆப்பிரிக்க சிறுவணிகர்களுக்கும் வண்டியில் லோடு அடிக்க வேண்டும். மோசமான சாலைகளில் பயணிக்க நம்பகமான வாகனம் வேண்டும். அதனால் துவக்கத்தில் ஜப்பானிய பைக் கம்பனிகள் ஆபிரிக்க சந்தையை குறிவைத்து களம் இறங்கின. 1970, 1980க்களில் ஜப்பானிய பைக்குகள் ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகின. ஆனால் அவற்றை காசு கொடுத்து வாங்கும் அளவு வசதி ஆப்பிரிக்கரிடம் இல்லை. வசதி படைத்தவர் மட்டுமே வாங்கி ஓட்டி வந்தார்கள்.
1990க்களில் சீனா களம் இறங்கியது. சுமார் 200 சீன கம்பனிகள் ஆப்பிரிக்க சந்தையை குறிவைத்து களமிறங்கின. மலிவான விலையில் விற்கபட்டதால் ஆப்பிரிக்காவின் மூலை முடுக்கெங்கும் சீன பைக்குகள் பரவின. ஆனால் விரைவில் பிரச்சனைகள் வர ஆரம்பித்தன. அவற்றின் தரம் சரியில்லை, ஆப்பிரிக்க சாலைகளை அவற்றால் தாக்குபிடிக்க முடியவில்லை.
இந்த சூழலில் பஜாஜ், டிவிஎஸ், ஹீரோ ஆகிய இந்திய கம்பனிகள் 2000 வாக்கில் ஆப்பிரிக்காவில் தடம் பதித்தன. மோசமான சாலைகள், லோடு அடிப்பது எல்லாமே இந்திய பைக்குகளுக்கு கைவந்த கலை. இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் நிறுவணிகர்கள் பைக்குகளை ஒரு ஆட்டோ மாதிரி பயன்படுத்தி லோடு அடிப்பார்கள். கிட்டத்தட்ட மேட் பார் ஈச் அதர் மாதிரி இந்திய வண்டிகள் ஆப்பிரிக்க சூழலுக்கு மிகவும் பொருத்தமானவையாக ஆகின.
அதிலும் இந்திய கம்பனிகள் கென்யா, நைஜிரியா, உகாண்டா, டான்சானியா என பல நாடுகளில் உள்ளூர் மெக்கானிக்குகளின் பார்ட்னர்ஷிப்புடன் சர்வீஸ் சென்டர்களை நிறுவின. விலை சீன பைக்குகளை விட கூடுதல், ஜப்பானிய பைக்குகளை விட குறைவு
ஆப்பிரிக்கா முழுக்க இந்திய பைக்குகள் பரவின.
சீனாவின் 200 பிராண்டுகளை தாண்டிய விற்பனையை பஜாஜ் பாக்சர் மட்டுமே எடுத்தது. இன்று ஆப்பிரிக்காவின் அதிக விற்பனையாகும் பைக் பஜாஜ் பாக்சர் தான். டிவிஎஸ், ஹீரோ எல்லாமே ஆப்பிரிக்கர்களின் வீடுகளில் பரிச்சயமான பிராண்டுகளாக ஆகின
இன்று பல ஆப்பிரிக்க நாடுகளில் 50%க்கும் மேலான சந்தை இந்த மூன்று கம்பனிகளுக்கும் சொந்தம்.
அத்துடன் நில்லாமல் அவை ஆப்பிரிக்காவில் எகிப்து முதல் தென்னாப்பிரிக்கா வரை அசெம்ப்ளி செய்யும் பாக்டரிகளை அமைத்து பைக்குகளை அஸெம்பிள் செய்தும் வருகின்றன.
தென்னமெரிக்காவிலும் இந்திய சாம்ராஜ்ஜியங்களின் வெற்றிப்பயணம் இதே போல் தொடர்கிறது. பஜாஜ் கம்பனியின் 50%க்கும் மேற்பட்ட விற்பனை வெளிநாடுகளில் இருந்துதான் வருகிறது
ஆப்பிரிக்கா போய் "நம்ம ஊரு வண்டி டிவிஎஸ்" என சொன்னால் அவர்கள் "இல்லை, இது எங்க ஊரு வண்டி என்பார்கள்"
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications