பொதுவாக எல்லோரும் குடிக்கும் டீ விலை 10 முதல் 15 ரூபாயாக இருக்கும், இதுவே பெரிய ஹோட்டலுக்கு சென்றால் 20 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையில் விற்கப்படும். இதுவே ஸ்டார்ட்பக்ஸ் போன்ற பிராண்டெட் கடைகளுக்கு சென்றால் குறைந்தது 150 முதல் 250 ரூபாய் வரையில் இருக்கும்.
ஆனால் இங்க டீ விலை இல்லை, டீ கொண்டு வரும் டீபாட் (Teapot) விலை 25 கோடி ரூபாயாம், முகேஷ் அம்பானி மனைவி நீதா அம்பானி பயன்படுத்தும் டீ கப் விலையே 6-7 லட்சம் என கூறப்பட்ட போது வாயடைத்து போன மக்களுக்கு 25 கோடி ரூபாய் Teapot என்றால் தலையே சுத்திவிடும்.

2016 ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம்பெற்ற இந்த டீபாட் தான் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான டீபாட் ஆகும். இந்தியாவில் டீபாட் அதிகளவில் பயன்படுத்தாவிட்டாலும் சிலர் வீட்டில் தினமும் பயன்படுத்தி தான் வருகிறார்கள். உலக நாடுகளில் குறிப்பாக ஆசிய மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் டீபாட் இருக்கும்.
இந்த நிலையில் The Egoist என்ற பெயரிடப்பட்டு உள்ள இந்த டீபாட் விலை 25 கோடி ரூபாய் என்று மதிப்பிடும் அளவுக்கு இதில் என்ன இருக்கு. இது மஞ்சள் தங்கம் மற்றும் வெள்ளியால் தயாரிக்கப்பட்டு மேலே 1658 வைரங்களும் 386 மாணிக்கங்களும் பதிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக 6.67 காரட் தாய்லாந்து ரூபி கற்களும் பதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் முக்கியமாக டீபாட் கைப்பிடி யானை தந்தத்தால் செய்யப்பட்டு உள்ளது. 2016 ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை படைக்கும் போதும் இதன் மதிப்பு 24.8 கோடி ரூபாய், இன்றும் பொது சந்தையில் ஏலம் விட்டால் குறைந்தது 60 முதல் 80 கோடி ரூபாய் வரையில் மதிப்பிட வாய்ப்பு உள்ளது.

இந்த காஸ்ட்லியான டீபாட் செய்தது பிரிட்டன் நாட்டில் குடியுரிமை பெற்ற நிர்மல் சேத்தியா தான், அவருடை N Sethia Foundation உத்தரவின் பெயரில் இவருடைய Newby Teas நிறுவனம் ஸ்பான்சர் செய்து Fulvio Scavia என்ற பிரபலமான ஜூவல்லரி நிறுவனம் தயாரித்தது. யார் இந்த நிர்மல் சேத்தியா..?
நிர்மல் சேத்தியா 1941 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் பிறந்தார், இவரது தந்தை பெயர் சோகன் லால்ஜி சேத்தியா. நிர்மல் சேத்தியா கடந்த 50 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தாலும், இந்தியா உடனும், இந்திய மண் உடனும் நெருக்கமாக உள்ளதையே விரும்புகிறாராம்.
நிர்மல் சேத்தியா இந்தியா, இங்கிலாந்து, ஆப்பிரிக்கா, ரஷ்யா மற்றும் பிற நாடுகளில் தொண்டு திட்டங்களை நடத்து வருகிறார். அவர் கல்வி, மதம் மற்றும் சுகாதாரத் துறைகளிலும் பணியாற்றுகிறார். அவரது நிகர சொத்து மதிப்பு 6.5 பில்லியன் பவுண்ட் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 6,84,49 கோடி ரூபாய்.


Click it and Unblock the Notifications