மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு.. ஓரே வருடத்தில் நடந்த பெரும் மாற்றங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் கொரோனாவின் தாக்கம் ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது எனில், மறுபுறம் விலைவாசி உயர்வு என்பது அதனைவிட மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 

குறிப்பாக நாடு முழுவதும் விலைவாசி அதிகரித்துள்ள சூழலில், உணவுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்கள் விலையானது கடுமையாக அதிகரித்துள்ளது.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கதையா.. பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வு..!

குறிப்பாக 22 அத்தியவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் தரவுகள் படியே, உணவுப் பொருட்களில், பருப்பு வகைகள், பழங்கள், முட்டை மற்றும் இறைச்சிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

11 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரிப்பு

11 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரிப்பு

குறிப்பாக சமையல் எண்ணெய் விலையும் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்றத்தினை கண்டுள்ளது. குறிப்பாக வனஸ்பதி, சோயா, பாமாயில், சூரியகாந்தி, கடலை எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்ட அனைத்து வகையான எண்ணெய் விலைகளும் கடுமையாக உயர்வை கண்டுள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பு ஆண்டில் எண்ணெய் விலை 20 - 56% வரை அதிகரித்துள்ளதாக மத்திய நுகர்வோர் துறை தரவுகள் கூறுகின்றன.

பல அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பு

பல அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பு

கொரோனா பாதிப்புக்கு இடையில் லாக்டவுன் காரணமாக மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கும் இந்த நிலையில், பல லட்சம் பேர் வேலைவாய்ப்பையும் இழந்து தவிக்கின்றனர். எண்ணெய் மட்டும் அல்ல பல அத்தியாவசியப் பொருட்கள் விலையும் மிக கடுமையாக அதிகரித்துள்ளது.

கடலை எண்ணெய் விலை
 

கடலை எண்ணெய் விலை

கடலை எண்ணெய் விலையானது கிலோ கடந்த மே 28,2020ல் 147.87 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28,2021ல் 177.59 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது மட்டும் 19.07% விலை அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்தி வரும் சூரியகாந்தி எண்ணெயின் விலை கிலோ 110.54 ரூபாயிலிருந்து 172 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு வருடத்தில் 62 ரூபாய் உயர்ந்துள்ளது. இது சுமார் 56% அதிகரித்துள்ளது.

கடுகு எண்ணெய் விலை

கடுகு எண்ணெய் விலை

கடுகு எண்ணெய் விலையானது கடந்த மே 28, 2020ல் கிலோ 118.79 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 42.75% அதிகரித்து, 171.45 ரூபாயாக அதிகரித்துள்ளது.

வனஸ்பதியின் விலையானது கடந்த மே 28, 2020ல் கிலோ 90.37 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 42.31% அதிகரித்து, 131.21 ரூபாயாக அதிகரித்துள்ளது.

பால்ம் ஆயில் விலை

பால்ம் ஆயில் விலை

இதே சோயா ஆயில் விலையானது கடந்த மே 28, 2020ல் கிலோ 100.78 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 48.38% அதிகரித்து, 153.85 ரூபாயாக அதிகரித்துள்ளது.

பால்ம் ஆயில் விலையானது கடந்த மே 28, 2020ல் கிலோ 86.98 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 52.8% அதிகரித்து, 133.99 ரூபாயாக அதிகரித்துள்ளது.

பருப்பு மற்ற முக்கிய பொருட்கள் விலை

பருப்பு மற்ற முக்கிய பொருட்கள் விலை

பருப்பு விலையானது கடந்த மே 28, 2020ல் கிலோ 93.78 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 14.99% அதிகரித்து, 107.84 ரூபாயாக அதிகரித்துள்ளது.

உப்பு விலையானது கடந்த மே 28, 2020ல் கிலோ 16.08 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 11.01% அதிகரித்து, 17.85 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அரிசி விலை

அரிசி விலை

மசூர் பருப்பு விலையானது கடந்த மே 28, 2020ல் கிலோ 77 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 10.96% அதிகரித்து, 8.445 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அரிசி விலையானது கடந்த மே 28, 2020ல் கிலோ 34.2 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 5.2% அதிகரித்து, 85.44 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சர்க்கரை விலை நிலவரம்

சர்க்கரை விலை நிலவரம்

உளுந்து விலையானது கடந்த மே 28, 2020ல் கிலோ 103.69 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 4.81% அதிகரித்து, 108.68 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே சர்க்கரை விலையானது கடந்த மே 28, 2020ல் கிலோ 39.7 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 0.71% அதிகரித்து, 39.44 ரூபாயாக அதிகரித்துள்ளது.

வெங்காயம் விலை

வெங்காயம் விலை

வெங்காயம் விலையானது கடந்த மே 28, கிலோ 2020ல் 20.69 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 13.39% அதிகரித்து, 23.46 ரூபாயாக அதிகரித்துள்ளது.

டீ (LOOSE TEA) விலையானது கடந்த மே 28, 2020ல் கிலோ 220.09 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 28.4% அதிகரித்து, 282.59 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே பால் விலையானது கடந்த மே 28, 2020ல் லிட்டர் 46.77 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 5.13% அதிகரித்து, 49.17 ரூபாயாக அதிகரித்துள்ளது.

விலை குறைந்த லிஸ்ட் இதோ

விலை குறைந்த லிஸ்ட் இதோ

தக்காளி விலையானது கடந்த மே 28, 2020ல் கிலோ 18.9 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 3.44% குறைந்து, 18.25 ரூபாயாக குறைந்துள்ளது.

பச்சை பயறு விலையானது கடந்த மே 28, 2020ல் கிலோ 111.6 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 4.96% குறைந்து, 106.12 ரூபாயாக குறைந்துள்ளது.

கோதுமை மாவு & வெல்லம்

கோதுமை மாவு & வெல்லம்

வெல்லம் விலையானது கடந்த மே 28, 2020ல் கிலோ 48.32 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 4.74% குறைந்து, 46.03 ரூபாயாக குறைந்துள்ளது.

கோதுமை மாவு விலையானது கடந்த மே 28, 2020ல் கிலோ 31.29 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 6.36% குறைந்து, 29.3 ரூபாயாக குறைந்துள்ளது.

உருளைக் கிழங்கு & கோதுமை

உருளைக் கிழங்கு & கோதுமை

கோதுமை விலையானது கடந்த மே 28, 2020ல் கிலோ 28.86 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 9.91% குறைந்து, 26 ரூபாயாக குறைந்துள்ளது.

உருளை கிழங்கு விலையானது கடந்த மே 28, 2020ல் கிலோ 25.72 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 25.51% குறைந்து, 19.16 ரூபாயாக குறைந்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

கடந்த ஆண்டில் பெட்ரோல் டீசல் விலையுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில் பல இடங்களில் 100 ரூபாயினை தொட்டுள்ளது. கடந்த ஆண்டில் பல முக்கிய நகரங்களின் பெட்ரோலின் சராசரி விலையானது லிட்டருக்கு 73 ரூபாயாகும். இதே டீசலின் சராசரி விலையானது லிட்டருக்கு 66 ரூபாயாகும். இதே நடப்பு ஆண்டில் டெல்லியில் பெட்ரோல் விலையானது 93.68 ரூபாயினையும், டீசல் விலையானது 84.61 ரூபாயினையும் எட்டியுள்ளது. இதே சென்னையில் பெட்ரோல் விலையானது 95.28 ரூபாயினையும், டீசல் விலையானது 89.39 ரூபாயினையும் எட்டியுள்ளது.

தொழிற்துறை காமடிட்டிகள் விலை நிலவரம்

தொழிற்துறை காமடிட்டிகள் விலை நிலவரம்

ஸ்டீல் விலையானது ஒரு காயில் விலையானது விலையானது கடந்த மே 28, 2020ல் 37,350 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 67,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே போல காப்பர் விலையானது கடந்த மே 28, 2020ல் 4,13,400 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 7,57,400 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அலுமினியம் & நிக்கல்

அலுமினியம் & நிக்கல்

நிக்கல் விலையானது கடந்த மே 28, 2020ல் 9,05,200 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 13,16,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அலுமினியம் விலையானது கடந்த மே 28, 2020ல் 1,32,000 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 1,94,350 ரூபாயாக அதிகரித்துள்ளது.

லெட் & ஜிங்க்

லெட் & ஜிங்க்

லெட் விலையானது கடந்த மே 28, 2020ல் 1,34,250 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 1,78,550 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஜிங்க் விலையானது கடந்த மே 28, 2020ல் 1,56,200 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே 28, 2021ல் 2,33,500 ரூபாயாக அதிகரித்துள்ளது.

விலை உயர்வுக்கு என்ன காரணம்

விலை உயர்வுக்கு என்ன காரணம்

இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து, மத்திய உணவுத் துறைச் செயலாளர், அளித்த பேட்டியில் இந்தியாவின் தேவைக்கேற்ப எண்ணெய் வித்துகள் உற்பத்தி இல்லை. நமது நாட்டின் எண்ணெய் தேவையில், 60% இறக்குமதி மூலமாகவே ஈடுகட்டுகிறோம். இறக்குமதியை தான் அதிகம் சார்ந்து உள்ளோம். எனவே, சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை உயரும் போது இந்தியாவிலும் அதன் விலை உயரும் சூழல் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் பெரும் வளங்கள் இருந்தும் இன்றும் நாம் அண்டை நாடுகளை சார்ந்திருப்பதையே இது சுட்டிக் காட்டுகின்றது. விலையேற்றம் என்பது சிறு தொகையாக இருந்தாலும், நாம் அனுதினமும் உபயோகிக்கும் பொருட்களுக்கு அதிகம் செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதிலும் கொரோனா போன்ற நெருக்கடியான காலகட்டத்திலும் எவ்வளவு செலவு செய்துள்ளோம் என்பது இந்த தரவுகளை பார்க்கும்போது தான் தெரிய வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indians are spending more retail segment, its hurt more their economy

Cornavirus impact.. Indians are spending more retail segment, its hurt more their economy
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X