இந்தியாவில் கொரோனா பாதிப்பால் வர்த்தகம் மற்றும் உற்பத்தி அனைத்தும் முடங்கிய நிலையில், மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே லாக்டவுன் காலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த லாக்டவுன் காலத்தில் நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்து அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடும் அதிகமாக இருந்தது.
இதனால் மக்கள் பொருட்கள் கிடைக்கும் நேரத்தில் 1 கிலோ வாங்கும் இடத்தில் 5 கிலோ, 10 கிலோ என அதிக அளவுகளில் வாங்கத் துவங்கினர். உதாரணமாக இந்த லாக்டவுன் காலத்தில் பிஸ்கட் விற்பனை எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இது பெரு நகரங்களில் மட்டுமல்ல சின்ன சின்னக் கிராமங்களிலும் மக்கள் அதிக அளவுகளில் வாங்கும் வர்த்தக மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இதேபோன்ற மாற்றம் தற்போது மதுபான விற்பனையிலும் ஏற்பட்டுள்ளது என மதுபான தயாரிப்பு நிறுவனங்களே தெரிவித்துள்ளது.
மக்கள் நிலை
கொரோனா தொற்றுக்குப் பயந்து மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலையில், உணவகம், பார், பப் என அனைத்தும் மூடப்பட்டதாலும், திருமணம், மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகள் அனைத்தும் தடைப்பெற்றதாலும் மதுபான பிரியர்கள் தற்போது வீட்டிலேயே அதிகளவிலான மதுபானத்தை அருந்தி வருவதாக யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆனந்த் கரிபாலு தெரிவித்துள்ளார்.
அதிகளவு விற்பனை
லாக்டவுன் காரணமாக மக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்க அனைத்து பொருட்களையும் அதிகளவில் வாங்கி வருகின்றனர். சமீபத்தில் சிகரெட் முதல் நுகர்வோர் பொருட்களைத் தயாரிக்கும் ஐடிசி நிறுவனம் கூட மக்கள் அதிகளவில் பொருட்களை வாங்கி வீட்டிலே சேமித்து வைக்கிறார்கள் எனத் தெரிவித்திருந்தது.
இதே நிலை தான் தற்போது மதுபான பிரிவிலும் ஏற்பட்டுள்ளது.
லாக்டவுன்
முதல் மற்றும் 2வது லாக்டவுன் காலகட்டத்தில் இந்தியாவில் மதுபான விற்பனை என்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டு இருந்தது. இதனால் மதுபான நிறுவனங்கள் லாபத்திற்கு மாறாக அதிகளவில் நஷ்டத்தைச் சந்தித்து வந்தனர்.
ஆனால் சில மாநிலங்களில் மதுபான விற்பனைக்கு அனுமதி கொடுக்கப்பட்ட பின்பு விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியது மட்டும் அல்லாமல் ஒரு முக்கியமான மாற்றத்தை இந்த மதுபான நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ளது.
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம்
மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்ட பின்பு லாக்டவுனுக்கு முந்தைய விற்பனை அளவை அடைவில்லை என்றாலும், குறிப்பிட்ட அளவிலான விற்பனையை இந்நிறுவனம் பெற்றுள்ளது. ஆனால் இந்த விற்பனையில் பல மாற்றங்களை இந்த நிறுவனம் சந்தித்துள்ளது.
1. அதிக விலை கொண்ட அல்லது ப்ரீமியம் பிரிவில் இருக்கும் மதுபானத்தின் விற்பனை அதிகளவில் குறைந்துள்ளது.
2. மதுபானம் வாங்கும் பெரும்பாலானோர் அதிக அளவில் வாங்குவது இயல்பாக மாறிவிட்டது.
3. பீர் அருந்துவோர் இந்த லாக்டவுன் காலத்தில் பீர்-ஐ வாங்காமல் அதிகளவில் விஸ்கி மற்றும் வோட்கா-வை விரும்பி வாங்குவதாகத் தெரிவித்துள்ளது.
8PM
இதேபோல் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ராடிகோ கெய்தான் நிறுவனத்தின் ப்ரீமியம் பிளாக் விஸ்கி பிராண்டான 8PM மதுபானம் ஜூன் மாதத்தில் மட்டும் 1 லட்சம் கேஸ்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும். இந்த வருடம் முடிவதற்குள் 8PM மதுபானத்தை 10 லட்சம் கேஸ் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வரி உயர்வு
இந்தியாவில் பல மாநிலங்களில் மதுபான விற்பனை வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும் மதுபான தயாரிப்பு நிறுவனங்களின் லாப அளவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறுகிறது.
விற்பனை உயர்வு
மேலும் இந்தியாவில் நாளுக்கு நாள் தளர்வுகள் அளவு அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து மதுபான விற்பனை உயர்ந்து வருவதாகவும், கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த ப்ரீமியம் மதுபான பிரிவில் தற்போது விற்பனை மிதிமான வேகத்தில் உயர்ந்து வருவதாகவும் கூறுகிறது மதுபான நிறுவனங்கள்
ஆன்லைன் ஆர்டர்
இந்த லாக்டவுன் காலத்தில் மதுபான விற்பனை நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆன்லைன் மதுபான விற்பனைக்கு அனுமதி கிடைத்துள்ளது. தற்போது இந்தியாவில் மகாராஷ்டிரா, ஒடிஷா, மேற்கு வங்காளம், சட்டீஷ்கர் ஆகிய மாநிலங்கள் ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி கொடுத்துள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

மீண்டும் கொரோனா..!! ஈரான் போருக்கு மத்தியில் கிளம்பும் புதிய பூதம்..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications