2022 ஆம் ஆண்டு உலகில் பெரும் பகுதி மக்களுக்கு ஒரு ரோலர் கோஸ்டராக இருந்தது என்றால் மிகையில்லை.
பலருக்கு உயிரை மட்டும் காப்பாற்றிக்கொண்டால் போதும் என ஓடிய நிகழ்வும் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஆண்டு முழுவதும் பரபரப்பாகவே இருந்தது என்றால் மிகையில்லை.
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் பேசிய சர்வதேச நிகழ்வுகளைத் தான் பார்க்கப்போகிறோம்.
தாலிபான் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான்
ஆகஸ்ட் 2021ல் தாலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியது மூலம் மக்கள் தங்கள் உயிரை பிடித்துக்கொண்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றது மறக்க முடியாத சம்பவமாக இருந்த நிலையில், 2022 ஒரு ஆண்டுத் தாலிபான்கள் ஆட்சி நிறைவடைந்தது.
சில வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் பெண்கள் இனி பூங்காக்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதத்தில், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளை மூடிவிட்டு 12-18 வயதுடைய பெண்கள் வீட்டிலேயே இருக்க உத்தரவு பிறப்பித்தது. ஆண்கள் துணை இல்லாமல் பெண்கள் வீட்டைவிட்டுத் தனியாக வெளியில் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாட்டையும் விதிகளையும் கொண்டு வந்தனர் தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகியும், ஆப்கானியர்களின் நிலை மோசமாகவே உள்ளது. பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது, ஊட்டச்சத்துக் குறைபாடு விகிதங்கள் அதிகரித்து வருகின்றன, பெண்களின் உரிமைகள் குறைக்கப்படுகின்றன, தொடர்ந்து மக்கள் இடம்பெயர்வு, சுகாதார அமைப்பு சிதைந்து வருவது இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பேசு பொருளானது.
ரஷ்யா-உக்ரைன் போர்
2014 இல் தொடங்கிய ரஷ்ய-உக்ரேன் மத்தியிலான பிரச்சனை பிப்ரவரி 24, 2022 அன்று பெரும் போர் ஆக மாறியது.போர் துவங்கிய சில வாரங்களில் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது, இதனால் ரஷ்யா படைகள் உக்ரைன் நாட்டில் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியது.
இந்தக் காலகட்டத்தில் உக்ரைன் நாட்டில் இருந்து உள்நாட்டு மக்களும், வெளிநாட்டு மக்களும் உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உக்ரைனில் ஊர் ஊராக நடந்தனர். இதில் இந்தியர்களும் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.
உலக நாடுகளின் உதவிகள் காரணமாக உக்ரைன் படை ரஷ்யா கைப்பற்றிய சில இடத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. உக்ரைனில் ரஷ்யாவின் ஏழு மாத தொடர் தாக்குதலுக்கு இந்தியா எவ்விதமான எதிர்ப்பு தெரிவிக்காதது உலக நாடுகள் மத்தியில் பெரும் பிரச்சனையாக இன்று வரையில் நிலவுகிறது.
கனடாவின் புதிய குடிவரவு கொள்கை
பிப்ரவரி 2022 இல், கனடா 2024 ஆம் ஆண்டில் சுமார் 475,000 வெளிநாட்டினரை தன் நாட்டில் சேர்க்க இலக்காகக் கொண்டு இருப்பதாக அறிவித்தது. இத்திட்டத்தில் அதிகப்படியாகப் பலன் அடைவது இந்தியர்களாக இருப்பார்கள் எனக் கணிக்கப்படுகிறது. கனடாவில் வெளிநாட்டு மக்கள் தொகையில் அதிகமானோர் இந்தியர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் கனடா நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் சீன் ஃப்ரேசர் செய்தியாளர்களிடம் பேசும் போதும், கனடாவில் பணியாற்றும் அனைத்து தற்காலிக விசா ஊழியர்களின் மனைவி / கணவன் மற்றும் பணியாற்றும் வயதில் இருக்கும் அவர்களுடைய பிள்ளைகள், சொந்த குடும்ப உறுப்பினர்களுக்குக் கனடாவில் பணியாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி
இலங்கைப் பொருளாதார நெருக்கடி பிரச்சனை அண்டை நாடுகளுக்கும், சீனாவிடம் அதிகக் கடன் வாங்கிய நாடுகளுக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி 2019 ஆம் ஆண்டு முதல் உருவானது என்றால் மிகையில்லை, 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் இந்நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி இது.
ஜூன் 2022 இல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும், அத்தியாவசியப் பொருட்களுக்குப் பணம் செலுத்த முடியாமல் போனதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில் இலங்கை முழுவதும் மக்கள் போராட்டங்களில் இறங்கியது மட்டும் அல்லாமல் மக்களும், முந்த ஆட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் வன்முறைகள் வெடித்து இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது. முந்தைய ஆட்சி தலைவர்களின் வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டது, கவர்னர் மாளிகை சூறையாடப்பட்டது.
இலங்கையின் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தாபய ராஜபக்சே ஆகியோர் நாட்டை விட்டு ஓடினர்.
அமெரிக்காவில் கருக்கலைப்புத் தடை
ஜூன் 2022 இல், கருக்கலைப்புக்கான அரசியலமைப்பு உரிமையை வழங்கிய 1973 ஆம் ஆண்டின் ரோ வி.வேட் வழக்கின் தீரப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்தத் தீர்ப்பின் மூலம் ஏறக்குறைய அமெரிக்காவில் 50 சதவீத மாநிலங்களில் கருக்கலைப்புத் தடைக்கு உத்தரவிட்டது. இது இந்தியாவில் பெரும் பேசு பொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.
ஈரான் - ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம்
ஹிஜாப் விதிகளை மீறியதாகக் கூறி அறநெறிப் காவலர்களால் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 22 வயது பெண் மஹ்சா அமினி மரணம் அடைந்தார். இந்தச் செய்தி மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
இதனால் ஈரான் நாட்டில் மதகுரு அமைப்பிற்கு எதிரான போராட்டங்கள் இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. இந்தப் போராட்டம் ஈரான் நாட்டின் 140 நகரங்களில் மாபெரும் மக்கள் போராட்டமாகவும், அரசுக்கு எதிராகவும் திரும்பியுள்ளது.
கடந்த 10 வருடத்தில் ஈரான் குடியரசிற்கு மிகவும் கடுமையான சவாலாக உருவெடுத்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications