உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேறு நாடுகளுக்குச் செல்வதற்கு அதிகப்படியான ஆர்வம் கொண்டு இருப்பதாக ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான சிபிஆர்இ சவுத் ஏசியா பிரைவேட் லிமிடெட் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக வர்த்தகம் மற்றும் வருமானம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை கொடுத்த வாய்ப்புகள் மூலம் இந்தியாவில் பல இளம் தலைமுறையினர் வெளிநாடுகளுக்குச் செல்வது மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது செய்யப்பட்டு உள்ள ஆய்வு இந்தியர்கள் எந்த அளவுக்கு வெளிநாடுகளில் குடியேற ஆர்வமாக உள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்தியா
சிபிஆர்இ சவுத் ஏசியா செய்த கணக்கெடுப்பில் சுமார் 16% பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவை விட்டு வேறு நாடுகளுக்குக் குடியேறியுள்ளனர். மேலும் 17% பேர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேறு நாடுகளுக்குக் குடியேற திட்டமிட்டுள்ளனர்.
ஆசியா மற்றும் சர்வதேச ஆய்வு
மேலும் இந்த ஆய்வை APAC பிராந்தியத்தில் செய்த போது இடமாற்றம் செய்யப்பட்டதாகப் பதிலளித்தவர்கள் எண்ணிக்கை 7% ஆகவும், உலகளாவிய ஆய்வில் ஏற்கனவே இடம்பெயர்ந்ததாக பதிலளித்தவர்கள் எண்ணிக்கை 6% ஆகவும் உள்ளது.
இந்தியா டாப்பு
APAC மற்றும் உலகளாவிய இரண்டிலிருந்தும் பதிலளித்தவர்களில் சுமார் 10% பேர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இடம் மாறத் திட்டமிட்டுள்ளனர். இரண்டு விஷயத்திலும் இந்தியா முன்னோடியாக உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
Gen Z தலைமுறை மக்கள்
இந்தக் கணக்கெடுப்பின்படி, Gen Z தலைமுறை மக்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடுகளில் குடியேற மிகவும் ஆர்வமாகவும், வேறு நாட்டில் புதிய வீட்டில் புதிய வாழ்க்கையைத் துவங்குவதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். baby boomers-ஐ காட்டிலும் Gen Z தலைமுறை மக்கள் அதிகம் வெளிநாட்டில் குடியேற திட்டமிட்டு உள்ளனர் என்பது இந்த ஆய்வின் முக்கியத் தகவல்.
சிபிஆர்இ சவுத் ஏசியா
சிபிஆர்இ சவுத் ஏசியா செய்த கணக்கெடுப்பில் சுமார் 20000 பேர் உலகளவில் கலந்துக்கொண்டனர், இதில் இந்தியர்கள் அதிகளவில் வெளிநாட்டில் குடியேற திட்டமிட்டு வருவதும், அதிலும் குறிப்பாக டெல்லி என்சிஆர், மும்பை, பெங்களூர், புனே ஆகிய நகரங்களில் இருப்போர் அதிகளவில் குடிபெயர விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்திய குடியுரிமை
இந்திய குடியுரிமை விடுத்து வெளிநாட்டில் குடியுரிமை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, 2011 ல் இருந்து வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை 16 லட்சமாக உள்ளது.
2022 ஆண்டு எண்ணிக்கை
2022 ஆம் ஆண்டில் மட்டும் 2,25,620 பேர் இந்திய குடியுரிமை விடுத்து வெளிநாட்டில் குடியுரிமை பெற்றுள்ளனர். 2020ல் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக 85,256 ஆக இருந்தது என இந்தத் தகவலை ராஜியசபாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்
16,63,440 பேர்
2015 ஆம் ஆண்டில் 1,31,489 பேரும், 2016 ஆம் ஆண்டில் 1,41,603 பேரும், 2017 ஆம் ஆண்டில் 1,33,049 பேரும் இந்திய குடியுரிமை விடுத்துள்ளனர். இதேபோல் 2018ல் 1,34,561 பேரும், 2019ல் 85,256 பேரும், 2021ல் 1,63,370 பேரும் இந்திய குடியுரிமை விடுத்துள்ளனர். 2011 ஆம் ஆண்டில் இருந்து இந்திய குடியுரிமை விடுத்த 16,63,440 பேர் சுமார் 135 நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications