சென்ட்ரம் இன்ஸ்டிடியூஷனல் ரிசர்ச் நிறுவனத்தின் (Centrum) புதிய அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் ஒரு ஆண்டுக்கு ரூ. 10 கோடிக்கும் அதிகமாக சம்பாதிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவில் வருமானம் ஈட்டுபவர்கள் 63 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரம் முன்னோக்கி செல்வதை சுட்டிக்காட்டுகிறது.
தற்போது, இந்தியாவில் சுமார் 31,800 தனிநபர்கள் ஒரு ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பாதிக்கின்றனர். இது கடந்த 5 ஆண்டுகளில் 63 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதேபோல ஒரு ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 10 லட்சம் நபர்களை எட்டியுள்ளது.

ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 58,200 ஆக அதிகரித்து, 49 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. பணக்கார இந்தியர்களின் வருமானம் வேகமாக அதிகரித்து வருகிறது. 2019 முதல் 2024-ஆம் நிதியாண்டுக்கு இடையில், ரூ. 50 லட்சத்திற்கு அதிகமான வருமானம் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 49 சதவீதம் அதிகரித்து 58,200 ஆகவும், ரூ.100 மில்லியனுக்கு மேல் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 63 சதவீதம் அதிகரித்து சுமார் 31,800 ஆகவும் உள்ளது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் மொத்த வருமானம் கடந்த 5 ஆண்டுகளில் 64 சதவீதம் அதிகரித்து ரூ.49 லட்சம் கோடியாக உள்ளது. 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தனிநபர்களின் வருமானம் 2019 முதல் 2024-ஆம் நிதியாண்டுக்கு இடையில் 121 சதவீதம் அதிகரித்து, 38 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. 5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் வருமானம் 106 அதிகரித்து, ரூ.40 லட்சம் கோடியாக உள்ளது.
இந்தியாவில் உள்ள ஹை நெட் வொர்த் (HNI) மற்றும் அல்ட்ரா ஹை நெட் வொர்த் தனிநபர்களின் (UHNI) ஒருங்கிணைந்த சொத்துக்கள் 2023-ஆம் ஆண்டில் 1.2 டிரில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2028-ஆம் ஆண்டிற்குள் 2.2 டிரில்லியன் டாலராக உயரும் என்றும், ஆண்டுதோறும் 13 முதல் 14 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் அறிக்கை கணித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் அதிக வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவின் பொருளாதார உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டுகிறது. அதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் செல்வம் வேகமாக வளர்ந்து வருவதையும் சுட்டிக் காட்டுகிறது. இனிவரும் காலங்களிலும் இந்தியாவில் அல்ட்ரா ஹை நெட் வொர்த் மற்றும் ஹை நெட் வொர்த் கொண்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications