சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களும், இந்திய நிறுவனங்களாலும், இந்தியாவை தளமாகக் கொண்ட சுவிஸ் நிறுவன கிளைகள் மற்றும் பிற இந்திய நிதி நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 2022ஆம் ஆண்டில் 11 சதவீதம் குறைந்து 3.42 பில்லியன் சுவிஸ் பிராங்க் ஆக குறைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய்.
இந்திய வாடிக்கையாளர்களின் மொத்த நிதி 2021 ஆம் ஆண்டில் 14 ஆண்டுகளில் இல்லாத அளவு 3.83 பில்லியன் சுவிஸ் பிராங்க் தொகை உயர்ந்திருந்தது. இரண்டு வருடங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது தடாலடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

சுவிஸ் நாட்டில் இருக்கும் வங்கிகள் அந்நாட்டின் மத்திய வங்கியான SNB க்கு அவர்களுடைய வங்கி வைப்பு நிதி குறித்த புள்ளிவிவரங்களை அறிவிக்கும். இதில் சுவிட்சர்லாந்தில் உள்ள இந்தியர்களின் பணமும் அடங்கும், ஆனால் இது அனைத்தும் கருப்பு பணமில்லை.
2022 ஆம் ஆண்டின் இறுதியில் ஸ்விஸ் வங்கிகளில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகை 3,424 மில்லியன் பிராங்க் என அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த தொகை வாடிக்கையாளர் டெபாசிட் தொகையாகவும், பிற வங்கிகள் வாயிலாகவும், டிரஸ்ட் அமைப்புகள் வாயிலாகவும், அதிகப்படியான தொகை பாண்ட், செக்யூரிட்டீஸ் மற்றும் பிற நிதியியல் முதலீட்டு கருவிகள் வாயிலாகவும் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
சுவிஸ் வங்கிகளில் 2006 ஆம் ஆண்டில் அதிகப்படியாக சுமார் 6.5 பில்லியன் சுவிஸ் பிராங்க் தொகை வைத்திருந்தனர். இதன் பின்பு 2011, 2013, 2017, 2020 மற்றும் 2021 ஆகிய சில ஆண்டுகள் தவிர பெரும்பாலான வருடத்தில் தொடர் சரிவு பாதையிலேயே இருந்துள்ளதை SNB தரவுகள் காட்டுகிறது.
மறுமுனையில் இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் செய்யும் டெபாசிட் தொகையை துல்லியமாக கணிக்கும் வங்கிகளின் locational banking statistics தரவுகள் படி 2022 ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் தொகை 18 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிகிறது. இது 2021 ல் 8 சதவீதம் குறைந்திருந்தது. 2020ல் 39 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications