இந்திய குடும்பங்களின் சேமிப்பு 50 வருட சரிவு.. பகீர் ரிப்போர்ட் வெளியிட்ட ஆர்பிஐ..!!

இந்திய மக்களின் சேமிப்பு அளவுகள் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த நிலையில் ஆர்பிஐ முக்கியமான அறிக்கையை வெளியிட்டு நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. 2023 ஆம் நிதியாண்டில் இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவு 50 வருடத்தில் இல்லாத அளவுக்கு குறைந்து நாட்டின் மொத்த ஜிடிபி-யில் வெறும் 5.1 சதவீதமாக மட்டுமே உள்ளது. 2022 ஆம் நிதியாண்டில் இதன் அளவு 7.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எப்படி தனிநபர் வருமானம் முக்கியமான அளவீடாக இருக்கிறதோ, அதேபோல் நாட்டின் நிதியியல் ஆரோக்கியத்தை கணக்கிடுவதில் அந்நாட்டின் குடும்பங்களின் சேமிப்பு அளவும் முக்கிய காரணியாக உள்ளது. இந்த நிலையில் 50 வருடத்தின் மோசமான நிலை என்பது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு என்ன காரணம்..?

இந்திய குடும்பங்களின் சேமிப்பு 50 வருட சரிவு.. பகீர் ரிப்போர்ட் வெளியிட்ட ஆர்பிஐ..!!

இந்திய குடும்பங்களின் சேமிப்பு 50 வருடத்தில் அல்லாத அளவுக்கு குறைய முக்கிய காரணமாக வருமானத்தில் சரிவு, கொரோனா தொற்றுக்கு பின்பு நுகர்வு அதிகரித்ததும் காரணமாக கூறப்படுகிறது. இதைவிட முக்கியமான ஒரு விஷயம் உள்ளது.

இந்திய குடும்பங்களின் மொத்த கடன் நிலுவை, 2022 ஆம் நிதியாண்டில் ஜிடிபி-யில் 3.8 சதவீதமாக இருந்த நிலையில், 2023 ஆம் நிதியாண்டில் 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது மக்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அதிகப்படியாக கடன் வாங்குகிறார்கள் என்பது பொருள். இதில் ரியல் எஸ்டேட் கடனும் அடக்கம்.

மேலும் இந்திய குடும்பங்களின் மொத்த கடன் அளவு வளர்ச்சி அளவான 5.8 சதவீதம் இந்திய சுதந்திரத்திற்கு பின்பு பதிவான 2வது அதிகப்பட்ச அளவாகும். இதற்கு முன்பு 2007 ஆம் நிதியாண்டில் இந்திய குடும்பங்களின் மொத்த கடன் அளவு 6.7 சதவீதமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்திய குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு கொரோனா தொற்று பதிப்பு காலக்கட்டமான 2021 ஆம் நிதியாண்டில் 22.8 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 2022 ஆம் நிதியாண்டில் 16.96 லட்சம் கோடியாகவும், 2023 ஆம் நிதியாண்டில் 13.76 லட்சம் கோடி ரூபாயாகவும் சரிந்துள்ளது.

மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கை படி மார்ச் 31, 2023 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் மொத்த கடன் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் சேர்த்து) 152,61,122.12 கோடி ரூபாயாக இருந்தது என்றும் 2024 மார்ச் 31ல் இதன் அளவு 169,46,666.85 கோடி ரூபாயாக உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம், உள்கட்டமைப்பு வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிந்தாலும், இதற்கு பின்னால் அதீத கடன் சுமை இருப்பதை சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடந்த 67 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த கடன் அளவு 55 லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்த நிலையில், மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் அளவு 155 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+