அமெரிக்கா: பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களிலும் சர்வதேச அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. டெக் துறையில் முன்னணி நிறுவனங்களான கூகுள், ஐபிஎம், மைக்ரோசாப்ட் உள்ளிட்டவை இன்னுமும் தங்களது ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு மற்றும் நிறுவன மறுக்கட்டமைப்பு உள்ளிட்ட காரணங்களால் ஊழியர்கள் பணிநீக்கம் நடைபெறுவதாக நிறுவனங்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களால் தான் எங்கள் வேலை பறி போகிறது என இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சாஃப்ட்வேர் இன்ஜினியர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகியிருக்கிறது.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் அண்மையில் வெளியிட்ட ஒரு வீடியோவில் தான் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் இதற்கு இந்தியர்களே காரணம் என்றும் கூறியுள்ளார்.
தேதி எதுவும் குறிப்பிடாமல் அவர் பதிவு செய்து வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த வீடியோவில் ”நான் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர், நான் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். அண்மையில் நானும் என்னுடைய மொத்த குழுவினரும் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறோம். இவ்வாறு பணிநீக்கம் செய்வதற்கான எக்ஸிட் இன்டர்வியூவின் போது, எங்களுடைய வேலை இந்தியாவில் வசிக்கக் கூடிய நபர்களுக்கு செல்ல இருப்பது தெரிய வந்தது” என கூறியுள்ளார்.
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் நானும் ஒரு இந்தியன் தான் எனக் கூறியிருக்கிறார். ஏன் எங்களை பணிநீக்கம் செய்துவிட்டு இந்தியாவில் இருப்பவர்களை பணியில் சேர்க்கிறீர்கள் நானும் கூட இந்தியன் தானே என்னை பணியில் நீட்டிக்க வைக்கலாமே என அவர் கேட்டாராம்.
அதற்கு அந்த நிறுவனம் உங்களுக்கு இது புரியாது நீங்கள் இனிமே இங்கே பணிபுரிய முடியாது. ஏனெனில் இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு தான் இந்த வேலை என கூறினார்களாம். நான் வேண்டுமெனில் இந்தியாவிற்கு இடம்பெயர தயார் என அவர் கூறியதாக அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு நிறுவனம் இல்லை இல்லை இந்தியாவில் இருப்பவர்களால் மட்டும்தான் இதை செய்ய முடியும் ,அவர்கள் குறைந்த ஊதியத்திற்கு இந்த வேலைகளை முடித்துக் கொடுப்பார்கள் என அந்த நிறுவனம் கூறியதாக அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களாலேயே இந்தியர்களுக்கு வேலை போகிறது என அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார். அவரது இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் 30 லட்சத்துக்கு அதிகமான பார்வைகளை பெற்றிருக்கிறது. பலரும் அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
More From GoodReturns

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications