உலகை அசத்தும் இந்திய சிஇஓ-க்கள்.. டாப் 10ல் 6 இடம் இந்தியர்களுக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா பெருமைப்படும் ஒரு தருணம் உருவாகியுள்ளது. உலகின் டாப் 10 தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலில் இந்தியாவின் பெரும்பான்மையானவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 

இதில் முக்கியமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரிகளைப் பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும் இப்பட்டியலில் Nvidia-வின் ஜென்சன் ஹுவாங் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். உலகளவில் மிகவும் பிரபலமான பிராண்ட் பைனான்ஸ் அமைப்பின் பிராண்ட் கார்டியன்ஷிப் இன்டெக்ஸ் 2023 பட்டியல் வெளியாகியுள்ளது.

சீனாவுக்கு அமெரிக்கா வைத்த செக்.. வாய்ப்பை தனக்கு சாதகமாக இந்தியா பயன்படுத்திக் கொண்டதா? சீனாவுக்கு அமெரிக்கா வைத்த செக்.. வாய்ப்பை தனக்கு சாதகமாக இந்தியா பயன்படுத்திக் கொண்டதா?

பிராண்ட் பைனான்ஸ்

பிராண்ட் பைனான்ஸ்

பிராண்ட் பைனான்ஸ் ஒவ்வொரு ஆண்டும் நிறுவனங்களின் பல்வேறு காரணிகளை ஆய்வு செய்து பட்டியலை வெளியிடும், அப்படி இந்த ஆண்டுப் பிராண்ட் கார்டியன்ஷிப் இன்டெக்ஸ் 2023 பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்தப் பட்டியலில் உலகின் டாப் சிஇஓ பட்டியல் இடம்பெற்றுள்ளது.

ஜென்சன் ஹுவாங்

ஜென்சன் ஹுவாங்

இந்த டாப் 10 பட்டியலில் Nvidia-வின் ஜென்சன் ஹுவாங் முதல் இடத்தையும். 2வது இடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியும் இடம்பெற்றுள்ள நிலையில்,3வது இடத்தில் மைக்ரோசாப்ட் சத்ய நாதெல்லா உள்ளார். கடந்த ஆண்டுச் சத்ய நாதெல்லா 2வது இடத்தில் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 டாப் 10 பட்டியல்
 

டாப் 10 பட்டியல்


இதைத் தொடர்ந்து அடோப் நிறுவனத்தின் சாந்தனு நாராயண் 4வது இடத்திலும், கூகுளின் சுந்தர் பிச்சை 5வது இடத்திலும், டெலாய்ட் நிறுவனத்தின் புனித் ரென்ஜென் 6வது இடத்திலும் உள்ளனர். இதைத் தொடர்ந்து 7வது இடத்தில் Fabrizio Freda நிறுவனத்தின் தலைவர் Estee Lauder, 8வது இடத்தில் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், 9வது இடத்தில் DBS தலைவர் பியூஷ் குப்தா, 10 வது இடத்தில் டென்சென்ட் தலைவர் Ma Huateng இடம்பெற்றுள்ளார்.

லீனா நாயர்

லீனா நாயர்

இதைத் தொடர்ந்து 11வது இடத்தில் Chanel நிறுவனத்தின் தலைலரான லீனா நாயர் இடம்பெற்றுள்ளார். இவர் தான் இப்பட்டியலில் முன்னணி இடத்தைப் பெற்ற பெண் தலைவர் ஆவார். மேலும் 100 சிஇஓக்கள் அடங்கிய இப்பட்டியலில் வெறும் 7 பெண்கள் மட்டுமே உள்ளனர்.

பிற இந்திய சிஇஓ-க்கள்

பிற இந்திய சிஇஓ-க்கள்

மேலும் 100 சிஇஓ-க்கள் அடங்கிய இப்பட்டியலில் மஹிந்திரா குரூப்-ன் ஆனந்த் மஹிந்திரா, ஏர்டெல்-ன் சுனில் மிட்டல், எஸ்பிஐ வங்கியின் தினேஷ் குமார் காரா, இன்போசிஸ் சலில் பாரிக் ஆகிய இந்திய தலைவர்கள் இடம்பெற்று உள்ளனர்.

டெக் மற்றும் டிஜிட்டல் மீடியா துறை

டெக் மற்றும் டிஜிட்டல் மீடியா துறை

100 பேர் அடங்கிய இப்பட்டியலில் 50 சதவீதம் பேர் டெக் மற்றும் டிஜிட்டல் மீடியா துறை நிறுவனத்தில் இருந்து இடம்பெற்று உள்ளனர். இதேபோல் டாப் 10 பட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தலைவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.மேலும் டாப் 100 சிஇஓ-கள் இன்ஜினியரிங் மற்றும் பைனான்ஸ் பட்ட படித்தவர்களாக உள்ளனர். 100 பேர் அடங்கிய இப்பட்டியலில் 50 சதவீதம் பேர் டெக் மற்றும் டிஜிட்டல் மீடியா துறை நிறுவனத்தில் இருந்து இடம்பெற்று உள்ளனர். இதேபோல் டாப் 10 பட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தலைவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.மேலும் டாப் 100 சிஇஓ-கள் இன்ஜினியரிங் மற்றும் பைனான்ஸ் பட்ட படித்தவர்களாக உள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்கா


நாடுகள் அடிப்படையில் பார்த்தால் இந்தப் பட்டியலில் அதிக எண்ணிக்கையில் சிஇஓகள் கொண்ட நாடு அமெரிக்கா, இதைத் தொடர்ந்து சீனா உள்ளது. இந்திய சிஇஓ-க்கள் சிறந்து செயல்பட்டாலும் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா 6வது இடத்தில் தான் உள்ளது.

 6 இந்தியர்கள்

6 இந்தியர்கள்

மேலும் டாப் 10 பட்டியலில் 2 இந்திய சிஇஓக்கள், 4 இந்திய அமெரிக்க வம்சாவளி சிஇஓ-க்கள் இடம்பெற்று உள்ளனர். டாப் 100 சிஇஓ-க்கள் பட்டியலில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் 6 பேரும், ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த 3 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ceo brand finance சிஇஓ
English summary

Indians leads Worlds top 10 ceo list from brand finance

Indians leads Worlds top 10 ceo list from brand finance
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X