சென்னை: உலகம் முழுவதும் இந்தியர்கள் பல நாடுகளில் குடியேறியிருக்கும் வேளையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் நாட்டில் கடந்த சில வருடமாக அதிகப்படியான இந்தியர்கள் குடியேறி வந்த நிலையில், தற்போது வழக்கத்திற்கு மாறாக இந்தியர்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளது.
இந்தியர்கள் ஸ்வீடன் நாட்டுக்கு அதிக எண்ணிக்கையில் குடியேறிய நாள் முதல் அதன் அளவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக, 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஸ்வீடனுக்கு வந்த இந்தியர்களைக் காட்டிலும் அதிகமான இந்தியர்கள் வெளியேறினர். இது வழக்கத்திற்குப் புறம்பாக நடக்கும் ஒரு விஷயமாகும்.

2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில், 2,837 இந்தியர்கள் ஸ்வீடனை விட்டு வெளியேறியுள்ளனர். இது கடந்த ஆண்டின் அதே காலத்தை ஒப்பிடுகையில் இதன் அளவு 171 சதவீத அதிகமாகும்.
இதன் மூலம் ஸ்வீடன் நாட்டை விட்டு வெளியேறும் வெளிநாட்டவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முக்கியமானவர்களாக உள்ளனர். இதேபோல் ஈராக், சீனா மற்றும் சிரியா நாட்டை சேர்ந்தவர்கள் வெளியேறுவதை விட அதிகமாக வெளியேறி வரும் நிலை உருவாகியுள்ளது.
ஸ்வீடன்-இந்திய வணிக அமைப்பின் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராபின் சுகியா இந்தியர்கள் அதிகளவில் ஸ்வீடன் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு நாட்டு அரசுகளும் முன்கூட்டியே இந்த வெளியேற்றத்தைத் தடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டாம் என்று எச்சரித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில் "ஸ்வீடன் நாட்டை விட்டு இந்தியர்கள் வெளியேறுவதற்கு எந்த முக்கிய காரணமும் இல்லை என்று கூற முடியாது, இதற்கான காரணத்தை முழுமையாக தெரிந்துகொள்ள ஒரு ஆண்டு இதுகுறித்து ஆலோசனை செய்ய வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் ஸ்வீடன் நாட்டின் லிவ்விங் காஸ்ட் மிகவும் அதிக செலவுகளைக் கொண்டு உள்ளது, சேவை அபார்ட்மெண்டுகள் மற்றும் தங்குமிடங்களின் பற்றாக்குறை போன்ற பல காரணிகளின் கலவையாக இருக்கலாம். ஆனால் இதுதான் காரணமாக இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியவில்லை" என்று ராபின் சுகியா தி லோக்கல் என்ற ஸ்வீடன் பத்திரிக்கைக்கு ஈமெயில் வாயிலாக பதில் அளித்துள்ளார்.
மேலே கூறப்பட்ட சில காரணிகள் வெளிநாட்டவர்கள் குறைவான செலவில் வாழ்க்கை முறையை நடத்த ஏதுவான நாடாக ஸ்வீடன் இல்லை என்பது அடிப்படை காரணமாகத் தெரிகிறது. ஆனால் இதேபோன்ற நிலை தற்போது கனடா, பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் நிலவுகிறது.
மேலும், ஸ்வீடன் அரசு சமீபத்தில் வொர்க் பர்மீட் அளிப்பதில் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது, இது அந்நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுத்துள்ளன.
உதாரணமாக 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் உயர் தகுதி கொண்ட வேவைகளில் புலம்பெயர்ந்தோருக்கு வழங்கப்பட்ட வொர்க் பர்மீட் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் அதே காலத்தை விட 20 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியக் குடிமக்களுக்கு முதல் முறையாக வழங்கப்பட்ட வொர்க் பர்மீட் 30 சதவீதம் வரை குறைந்துள்ளன. இது தான் இந்தியர்கள் ஸ்வீடன் நாட்டை விட்டு வெளியேற முதலும் முக்கிய காரணமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இந்த சவால்களுக்கு மத்தியிலும், 2024 ஆம் ஆண்டில் முதல் 6 மாத காலத்தில் ஸ்வீடனுக்கு வந்த வெளிநாட்டவர்கள் பட்டியலில் இந்தியர்கள் 2வது இடத்தில் உள்ளனர், உக்ரைன் நாட்டினர் முதல் இடத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications