அமெரிக்கா பல கோடி இந்தியர்களின் கனவு தேசம், சிலருக்கு பாச பிணைப்பு, இன்னும் சிலருக்கு பணத்தை கொட்டும் தேவதை, இப்படி ஒவ்வொருவருக்கும் அமெரிக்க செல்ல காரணங்கள் உண்டு. ஆனால் இந்த அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக விசா நேர்காணலுக்கான காத்திருப்பு காலம் உள்ளது.
அமெரிக்க அரசு கொரோனா தொற்று காலத்தில் விசா வழங்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தியதில் இருந்து அடுத்தடுத்து பல பிரச்சனைகள் உருவானது. இதில் முக்கியமான பிரச்சனை அமெரிக்க தூதரகத்தில் விசா நேர்காணலுக்கான காத்திருப்பு காலம், இதை குறைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் இதை குறைக்க முடியாமல் தவிக்கிறது அமெரிக்க அரசு.

தற்போது இந்தியாவில் இருந்து B1/B2 விசா பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 500 நாட்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அரசின் Bureau of Consular Affairs அமைப்பின் இணையதள தகவல் படி B1/B2 விசா பெறுவதற்கான நேர்காணல் காத்திருப்பு காலம் 500 நாட்களுக்கு அதிகமாக உள்ளது.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் B1/B2 விசா பெற 542 காலாண்டர் நாட்கள் காத்திருக்க வேண்டும், இதேபோல் கொல்கத்தாவில் 539 நாட்கள், மும்பையில் 596 நாட்கள், சென்னையில் 531 நாட்கள், ஹைதராபாத்தில் 511 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் யாருக்கு அதிக பாதிப்பு..?
சென்னையில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் B1/B2 விசா பெற மார்ச் மாதம் நிலவரப்படி காத்திருப்பு காலம் 680 நாளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
B1 விசா என்பது அமெரிக்காவில் வணிகம் தொடர்பான விஷயங்களுக்கு தனிநபர்களுக்கு வழங்கப்படும் விசா, B2 விசா என்பது சுற்றுலா பணிகளுக்காக வழங்கப்படும் விசா. இந்த விசா-வை பயன்படுத்தி தான் இந்தியர்கள் அமெரிக்காவில் இருக்கும் தங்கள் குடும்பத்தினரை சந்திப்பது, முதல் மருத்துவ சேவைகளுக்காக செல்வோர் பயன்படுத்தும் விசா.
இந்த காத்திருப்பு காலம் என்பது அமெரிக்க அரசு வழங்கியுள்ள interview waivers சலுகைக்கு தகுதி பெறாதவர்களுக்கானது. 14வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் interview waivers சலுகையின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதேபோல் முன்பு விசா பெற்றவர்கள் clearance received அல்லது department authorization பெற்று இருந்தால் புதிதாக விசா விண்ணப்பிக்கும் போது interview waivers சலுகையின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
இதை விட முக்கியமாக விண்ணப்பதாரர்கள் எற்கனவே விசா பெற்றவர்கள் விசா காலம் முடிந்து 48 மாதத்திற்குள் மீண்டும் விசா ரினிவல்-க்காக விண்ணப்பித்தாலும் interview waivers சலுகையின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் காத்திருப்பு காலமும், ஆட்கள் பற்றாக்குறையும் அதிகமாக இருக்கும் காரணத்தால் அமெரிக்க அரசு இந்தியர்களுக்கு சிறப்பு சலுகையாக பாங்காக்-ல் இருந்து விசா விண்ணப்பிக்க சலுகை வழங்கப்பட்டு உள்ளது. கடந்த சில வருடமாக அமெரிக்க அரசு பல சலுகைகளை வழங்கியுள்ளது, ஆனாலும் காத்திருப்பு காலம் குறையவில்லை.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications