ஒரு மாதத்திற்கு 11ஜிபி இண்டர்நெட் டேட்டா.. இந்தியர்களின் வசந்த காலம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் 4ஜி டேட்டா, மலிவான டேட்டா திட்டம், குறைந்த விலையில் கிடைக்கும் அதிநவீன ஸ்மார்ட்போன், வேகமாக வளர்ந்து வரும் வீடியோ சேவைகள் எனப் பல சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் இந்தியாவில் தற்போது மக்களின் இண்டர்நெட் பயன்பாட்டு அளவு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஒரு இந்தியன் சராசரியாக மாதத்திற்கு 11 ஜிபி இண்டர்நெட் டேட்டா-வை பயன்படுத்துவதாத மொபைல் போன்களின் ராஜாவாக விளங்கிய நோக்கிய தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்திற்கு 11ஜிபி இண்டர்நெட் டேட்டா.. இந்தியர்களின் வசந்த காலம்..!

அதிரடி வளர்ச்சி

இந்தியாவில் டேட்டா பயன்பாடு 2019ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 47 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, இவை அனைத்திற்கும் முக்கியமான காரணம் மிகவும் குறைவான காலத்தில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் 4ஜி சேவை கிடைத்தது தான் என நோக்கியா நிறுவனம் தனது வருடாந்திர மொபைல் பிராண்ட்பேன்டு இந்தியா டிராபிக் இன்டெக்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

96 சதவீதம்

தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் இண்டர்நெட் டேட்டாவில் 96 சதவீதம் 4ஜி டேட்டா தான், இதே தருணத்தில் 3ஜி டேட்டா பயன்பாடு எப்போதும் இல்லாத அளவிற்கு 30 சதவீதம் சரிந்துள்ளது டெலிகாம் நிறுவனங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

16 சதவீதம் வளர்ச்சி

மேலும் இந்தியாவில் டேட்டா பயன்பாட்டு அளவு 2019ஆம் ஆண்டில் 47 சதவீதம் வரையில் உயர்ந்து 11 ஜிபி டேட்டாவாக இருக்கும் நிலையில், 4ஜி டேட்டா இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரையில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 4ஜி டேட்டா பயன்பாடு 16 சதவீதம் வளர்ச்சி அடைகிறது.

இந்தியா தான் டாப்பு

சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், தென் கொரியா, ஜப்பான், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் டேட்டா பயன்பாடு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த அதிரடி வளர்ச்சி யார் காரணம் தெரியுமா..? ஒரு நிறுவனம் தான்.. ஆம் ஜியோ மட்டுமே. சரி ஜியோ அறிமுகத்திற்குப் பின் இந்தியாவில் என்னவெல்லாம் மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரியுமா..? வாங்க பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indians on average consume over 11GB data per month

Cheap data plans, affordable handsets, increasing popularity of video services and 4G networks have helped average data consumption per user in India to grow to over 11 GB a month, telecom gear maker Nokia said on Thursday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X