இந்தியாவில் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளதால் அதன் மூலம் வரும் வருவாய் 2025 நிதியாண்டில் 14 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் ஆவணங்களின்படி 2025 நிதியாண்டில் பயணிகள் டிக்கெட் வருவாய் ரூ.80,000 கோடியாக உயரும் என இலக்கு வைக்கப்பட்டு உள்ளது, இது கடந்த ஆண்டில் ரூ.70,000 கோடியாக இருந்தது. அதேவேளையில் சரக்குப் போக்குவரத்து மூலம் வருவாய் இந்த நிதியாண்டில் தேக்கம் அடையும் என கணிக்கப்பட்டு உள்ளது. 2025 நிதியாண்டில் சரக்குப் போக்குரவரத்து வருவாய் ரூ.1,74,500 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கும் வேளையில், கடந்த ஆண்டு ரூ.1,74,590ஐக் காட்டிலும் சற்றேக் குறைவாக உள்ளது.
கடந்த ஆண்டு சாதனை அளவாக சரக்குப் போக்குவரத்து மூலம் வருவாய் இருந்தாலும் அதில் நிலக்கரி போக்குவரத்துமூலம் பெருமளவு வருமானம் வந்தது. சாலை, விமானம், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மூலம் ஏற்படும் போட்டி காரணமாக வழக்கமான பிற பொருட்களின் போக்குவரத்து குறைவாக இருக்கும் எனத் தெரிகிறது. பட்ஜெட் கணக்கும் பயணிகள் டிக்கெட் கட்டணத்தைக் குறைப்பதால் கிடைக்கும் வருவாயும் ஒரு காரணமாக இருக்கிறது.

2024 நிதியாண்டில் இந்திய ரயில்வே எப்போதும் இல்லாத வகையில் 1591 மில்லியன் டன் அளவிலான சரக்குகளை ரயில்வே துறையின் சரக்குப் போக்குவரத்து பிரிவு கையாண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரயில்வே வருமானம் 2.73 லட்சம் கோடி ரூபாய் ஆக இருக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
இது முந்தைய அண்டைக் காட்டிலும் 5 சதவீதம் அதிகமாகும்.
இதனிடையே விபத்து தடுப்பு கவச் அமைப்புக்காக பட்ஜெட்டில் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய ஹைஸ்பீடு ரயில் திட்டம், எலக்ட்ரிக் இன்ஜின்கள் தயாரிப்பு, ரயில் பெட்டிகளுக்காகவும் நிதி அதிகளவில் ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கவச் அமைப்புக்காக ரூ.1,112.57 கோடி 2025 நிதியாண்டுக்காக நிதி ஒதுக்கப்பட்டதாகவும் இது இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.557.96 கோடியைவிட அதிகம் என்று கூறியுள்ளார்.
2024 நிதியாண்டைப் போலவே இந்த நிதியாண்டிலும் ரயில்வே பாதுகாப்பு திட்டத்துக்காக ரூ.45,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1.08 டிரில்லியன் ரூபாய் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் கூறியுள்ளார். இது கவச் அமைப்பு, சிக்னல் அமைப்புகள் மேம்பாடு, பழைய இருப்புப் பாதைகளை மாற்றுதல் போன்ற திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
அண்மையில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துகளால் ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இது தவிர 1600 ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்படுகிறது. 38,000 ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்படுகிறது. இது இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டை விட 46 சதவீதம் அதிகமாகும். கூடுதலாக டிரான்ஸிட் சார்ந்த மேம்பாட்டுத் திட்டம் 14 பெரிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.
Story written by: Jayachandran
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications