கொரோனாவால் சர்வதேச பொருளாதாரச் சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்ட போது முதலீட்டாளர்களுக்கு இருக்கும் ஓரே பாதுகாப்பான முதலீட்டுத் தளம் தங்கம். இதன் எதிரொலியாகத் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்த காரணத்தால் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை அதிகமாக இருக்கிறது.
தங்கத்தின் அதிரடி விலை உயர்வால் இந்தியா மற்றும் சீனாவில் தங்க நகை விற்பனை கிட்டத்தட்ட 50 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. மேலும் நிதி தேவைக்காகப் பல நாடுகளின் மத்திய வங்கிகள் அரசு கருவூலத்தில் இருந்த தங்கத்தை விற்பனை செய்த மோசமான நிகழ்வுகள் செப்டம்பர் காலாண்டில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் தங்க நகைகளை வாங்க வேண்டிய காரணத்திற்காகவோ, நிதி தேவையின் காரணத்திற்காகவோ இந்திய மக்கள் கடந்த 8 வருடத்தில் இல்லாத வகையில் அதிகளவில் பழைய தங்கத்தைப் பயன்படுத்தி உள்ளனர்.
இந்திய குடும்பங்கள்
இந்தியப் பொருளாதாரத்தில் கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புகளின் காரணமாக இந்தியக் குடும்பங்களில் அதிகளவிலான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதேபோல் தங்கத்தின் விலை அதிகமாக இருந்த காரணத்தினால் இந்திய மக்கள் வேறு வழி இல்லாமல் பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்து புதிய தங்க நகைகளை வாங்கியுள்ளனர்.
41.5 டன் பழைய தங்கம்
ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் சுமார் 41.5 டன் பழைய தங்கத்தை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தில் இதன் அளவு 36.5 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவில் பழைய தங்கத்தைப் பயன்படுத்திய அளவு சுமார் 13.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
3 காரணங்கள்
இந்தியாவில் மக்கள் பழைய தங்க நகைகளை விற்க 3 காரணங்கள் உண்டு.
1. தங்கம் விலை அதிகமாக இருக்கும் போது லாபத்திற்காகத் தங்கத்தை விற்பனை செய்வது.
2. வீட்டுத் தேவைக்குப் பணம் பற்றாக்குறை ஏற்படும் போது கடன் பெறுவதைத் தவிர்க்க மக்கள் தங்கம் விற்பனை செய்வார்கள்
3. புதிய சொத்துக்களை வாங்கத் திட்டமிடும் கையில் இருக்கும் தங்கத்தைப் பணமாக்குவது.
செய்கூலி
பொதுவாகச் சாமானியர்களுக்குத் தங்கம் விலை அதிகமாக இருக்கும்போது பழைய தங்க நகைகளை விற்று லாபம் பார்க்கும் எண்ணம் இருக்காது. காரணம் பழைய தங்க நகைகளை விற்பனை செய்யும் போது செய்கூலி மற்றும் நகைகளில் இருக்கும் அழுக்கு ஆகியவற்றின் காரணமாக அதிகளவிலான தொகையை இழக்க நேரிடும்.
எனவே செப்டம்பர் காலாண்டில் விற்கப்பட்ட பழைய நகைகள் லாபத்திற்காக அல்ல வீட்டு தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்காக என்பதை உணர்த்துகிறது.
உலக நாடுகள்
இந்தியாவில் பழைய தங்க நகைகளின் பயன்பாடு 13.6 சதவீதம் அதிகரித்த நிலையில், உலகளவில் பழைய நகைகளை மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு கடந்த ஆண்டை விடவும் 6 சதவீதம் அதிகரித்து 376.1 டன் தங்கமாக உள்ளது.
உலக நாடுகள்
சமானிய மக்கள் மட்டும் அல்லாமல் உலக நாடுகளும் பொருளாதாரப் பாதிப்பால் தனது சேமிப்புக் கிடங்கில் இருக்கும் தங்கத்தை விற்றுப் பணம் பெற்றுள்ளது.
2020ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் எப்போதும் இல்லாத வகையில் சுமார் 12.1 டன் தங்கத்தை நிதி தேவைக்காக விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதை மத்திய வங்கி தங்கத்தை விற்காமல் சுமார் 141.9 டன் தங்கத்தை வாங்கிக் குவித்ததுள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications