இந்திய மக்கள் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ரிசர்வ் வங்கியின் LRS திட்டத்தின் வாயிலாகச் சுமார் 2 பில்லியன் டாலர் அளவிலான தொகையை வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளனர். அதாவது வெறும் 30 நாட்களில் சுமார் 15000 கோடி ரூபாய் அளவிலான பணத்தை வெளிநாட்டுகளுக்கு அனுப்பியுள்ளனர். 2 பில்லியன் டாலர் என்பது 3 வருடம் உச்ச நிலை.
2 பில்லியன் டாலர்
இந்தியர்கள் செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 1.97 பில்லியன் டாலர் தொகை வெளியேற்றத்திற்குக் கிரிப்டோ கரன்சி முதலீடு தான் காரணமெனக் கருத்து நிலவும் வேளையில், ரிசர்வ் வங்கி இந்த 1.97 பில்லியன் டாலர் தொகை எங்குச் சென்றுள்ளது என விளக்கமும் அளித்துள்ளது.
கிரிப்டோ சந்தை
கிரிப்டோ சந்தை முதலீடுகள் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் பெரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில், கிரிப்டோ முதலீட்டில் அதிகம் லாபம் கிடைக்கும் நிலையிலும், இந்தியாவில் இருந்து பெருமளவிலான தொகை வெளியேறி உள்ளது கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்திருக்கலாம் என அனுமானம் இருக்கிறது.
60 சதவீத தொகை
ஆனால் ரிசர்வ வங்கி அளித்துள்ள தரவுகள் அடிப்படையில் கிட்டதட்ட 2 பில்லியன் டாலர் அளவிலான தொகையில் சுமார் 60 சதவீத தொகை வெளிநாட்டு பயணத்தின் வாயிலாகவும், படிப்புக்காகவும் சென்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் கூறுகிறது.
LRS திட்டம்
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - செப்டம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் LRS திட்டத்தின் வாயிலாகச் சுமார் 8.9 பில்லியன் டாலர் அளவிலான தொகை வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இது கடந்த நிதியாண்டில் 5.7 பில்லியன் டாலர் மட்டுமே.
வருடத்திற்கு 2,50,000 டாலர்
இந்திய ரிசர்வ் வங்கியின் LRS திட்டம் மூலம் இந்தியர்கள் ஒருவர் ஒரு வருடத்திற்கு 2,50,000 டாலர் அளவிலான தொகையை அனுப்ப முடியும். இதில் கல்வி, மருத்துவம் முதல் முதலீடு, சுற்றுலா வரையில் அனைத்தும் வரும்.
ரிசர்வ் வங்கி
இப்படி இந்தியாவில் இருந்து செப்டம்பர் மாதம் வெளியேறிய தொகையில் 60 சதவீதம் கல்வி மற்றும் பயணங்களுக்காகச் செலவிடப்பட்டது ரிசர்வ் வங்கியின் தரவுகள் மூலம் தெளிவாகியுள்ளது.
முதலீட்டுச் சந்தை
இதேபோல் வைப்பு நிதி, தொத்து கொள்முதல், பங்கு மற்றும் பத்திர முதலீடுகளில் செப்டம்பர் மாதம் 765 மில்லியன் டாலர் தொகை குவிந்துள்ளது. இதில் பெரும் பகுதி கிரிப்டோ சந்தைக்குச் சென்று இருக்கலாம் என்பது தான் தற்போது அனுமானம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications