இந்தியாவின் டாப் 10 நகரங்களில் அழகுசாதனப் பொருட்கள் பிரிவில் விற்பனையாகும் லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் மற்றும் ஐலைனர் உள்ளிட்ட 10 கோடிக்கும் அதிகமான அழகுசாதனப் பொருட்கள் மீதான கடந்த ஆறு மாத வர்த்தகம் குறித்து காந்தார் வேர்ல்ட் பேனல் முக்கியமான ஆய்வு நடத்தியுள்ளது.
இந்த ஆய்வின் படி இந்திய மக்கள் அழகு சாதனப் பொருட்களுக்காக 5,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளனர், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 40 சதவீத பொருட்களின் விற்பனை ஆன்லைனில் செய்யப்பட்டு உள்ளது என்பது தான். இந்தியாவில் அழகுசாதனப் பொருட்களுக்கான சந்தை பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்துள்ளது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

அழகுசாதனப் பொருட்களின் விற்பனை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் அசத்தி வருகிறது. குறிப்பாக கிராமம், டவுன் பகுதிகளில் இருக்கும் மக்கள் ஆன்லைன் மூலம் அதிகளவிலான பொருட்களை முன்னணி பிராண்டுகளில் இருந்து வாங்கி வருகிறார்கள். குறிப்பாக நைகா போன்ற பல ஈகாமர்ஸ் தளம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் அழகுசாதனப் பொருட்களை வாங்கும் மக்களின் சராசரி செலவுகளை காட்டிலும், பணிபுரியும் பெண்கள் இதற்கு செலவழிக்கும் தொகை 1.6 மடங்கு அதிகமாகும். இந்த விஷயம் தான் காந்தார் வேர்ல்ட் பேனல் ஆய்வின் முக்கியமானது, கொரோனா காலத்தில் கண்களை சார்ந்த அழகு சாதன பொருட்கள் மட்டும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது நினைவிருக்கும்.
தற்போது வொர்க் ப்ரம் ஹோம் முடிந்து அனைவரும் அலுவலகம், ஷாப்பிங் செல்ல துவங்கிய நிலையில் லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் மற்றும் ஐலைனர் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்குகின்றனர். காந்தார் வேர்ல்ட் பேனல் ஆய்வில் ஒரு வாடிக்கையாளர் சராசரியாக 1,214 ரூபாய் வரையில் அழகுசாதன பொருட்களுக்காக விற்பனை செய்கின்றார்.
மொத்த அழகு சாதன பொருட்கள் விற்பனையில் லிப் சார்ந்த பொருட்கள் மட்டும் 38 சதவீத பங்கீட்டை கொண்டு உள்ளது. இதன் மூலம் இப்போதைய டிரெண்ட் உதடுகளை அழகாக்குவது தான்.


Click it and Unblock the Notifications