உலக கருணை தினத்தன்று கிரவுட் பண்டிங் தளமான கீட்டோ (Ketto) தனது நிறுவனம் பெற்ற நன்கொடை தரவுகளை வைத்து எந்த மாநில மக்கள் அதிகம் நன்கொடை அளித்துள்ளனர்..? நன்கொடை அளிக்கும் போது மக்கள் பாலோ செய்யும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன, சராசரியாக மக்கள் எவ்வளவு நன்கொடை அளிக்கின்றனர் என்பது போன்ற பல தரவுகளை வெளியிட்டு உள்ளது.
கீட்டோ நிறுவனத்தின் நன்கொடை தரவுகள் படி இந்த வருடம் சுமார் 419,893 இந்தியர்கள் முதன்முறையாக ஆன்லைன் வாயிலாக நன்கொடைகளை வழங்கியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் ரூ 500 நன்கொடை அளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் மிகப்பெரிய நன்கொடையாக கர்நாடக மாநிலம் மைசூர்-ஐ சேர்ந்தவர் சுமார் 25,00,000 ரூபாயை நன்கொடையாக கொடுத்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த நன்கொடையாளர் ஒருவர் கடந்த ஆண்டில் 941 கீட்டோ நன்கொடைகளை வழங்கினார்.
மேலும் வாரத்தின் மற்ற நாட்களுடன் ஒப்பிடும்போது பெரும்பாலான மக்கள் வெள்ளிக்கிழமைகளில் நன்கொடை அளிப்பதைக் வாடிக்கையாக கொண்டு உள்ளதை கீட்டோ தெரிவித்துள்ளது. கீட்டோ-வில் சராசரியாக நன்கொடை அளவு ரூ.1120.
இதோடு மும்பை விலங்கு நலக் காரணங்களுக்காக நன்கொடை அளித்து ஆதரிப்பதில் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் 2வது இடத்தில் உள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில், டெல்லிவாசிகள் கல்வியை விட உணவு தொடர்பான காரணங்களுக்காக நன்கொடை அளித்து ஆதரிக்க அதிகம் விரும்புகின்றனர்.
மேலும், கீட்டோ நன்கொடையாளர்கள் இந்த ஆண்டு சுமார் 13 லட்சம் நன்கொடைகளை வழங்கினர். கிரவுட் பண்டிங் தளம் ஒவ்வொரு மாதமும் ஆறாவது நாளில் அதிக எண்ணிக்கையிலான நன்கொடைகளைப் பெற்றுள்ளதையும் தனது அறிக்கையில் குறிப்பிட்ட கீட்டோ, பிப்ரவரி 06, 2023 அன்று இரவு 11:33 மணிக்கு, ஒரே நிமிடத்தில் கீட்டோ அதிக நன்கொடைகளைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நன்கொடையாளர்கள் பெரும்பாலும் இரவு 10 முதல் 11 மணி வரையிலான காலத்தில் நன்கொடை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நன்கொடை மூலம் வருமான வரி சட்டத்தின் 80G வரி விலக்கு கீழ் ஆன்லைன் நன்கொடையாளர்கள் சுமார் 51,829,651 ரூபாய் மதிப்பிலான வரியை சேமித்துள்ளதாக கீட்டோ தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் அதிக நன்கொடை வழங்கிய டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications