டிசம்பர் 31 ஆம் தேதியன்று சோமேட்டோவும் பிளிங்கிட்டும் சேர்ந்து 3 லட்சம் டெலிவரி பாய்ஸ்கள் மூலம் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான ஆர்டர்களை பெற்று ஏராளமான டெலிவரிகளை செய்துள்ளது என பிளிங்கிட் மற்றும் சோமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும் தேசம் புத்தாண்டை சிறப்பான முறையில் கொண்டாடுவதற்காக பாடுபட்டவர்களுக்கு நன்றி. எங்களது டெலிவரி பார்ட்னர்களும் ரெஸ்ட்டாரென்ட் பார்ட்னர்களும் இதை சாத்தியப்படுத்தியுள்ளனர் எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் புத்தாண்டின் முதல் நாளில் இந்திய மக்கள் ரூ.97 லட்சத்துக்கும் மேலாக டெலிவரி செய்தவர்களுக்கு டிப்ஸ் அளித்துள்ளனர். அதாவது ஒரே நாளில் 97 லட்சம் ரூபாய் அளவிலான தொகையை மக்கள் புத்தாண்டு மகிழ்ச்சியில் டிப்ஸ் ஆக கொடுத்துள்ளனர்.
டிசம்பர் 31இல் செய்யப்பட்ட டெலிவரியை கணக்கிட்டால் கடந்த 6 ஆண்டுகளின் புத்தாண்டு தினத்தின் மொத்த டெலிவரிக்கு இணையாக இருந்தது. ஆர்டர்கள் அந்த அளவுக்கு மலைபோல் குவிந்து விட்டது என்றும் கோயல் கூறியுள்ளார்.
2015, 2016, 2017, 2018, 2019, 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்று சோமேட்டோ டெலிவரி செய்த மொத்த ஆர்டர்களையும் 2023 டிசம்பர் 31 ஆம் தேதி ஆர்டர் மிஞ்சிவிட்டது என்றும் கூறினார். அதுமட்டுமல்லாமல் சில சுவாரஸ்யமான தகவல்களையும் தீபிந்தர் கோயல் பகிர்ந்துள்ளார்.
டிசம்பர் 31 ஆம் தேதியன்று கொல்கத்தாவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் 125 ருமாலி ரொட்டிகளை ஆர்டர் செய்துள்ளார். மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு ஆர்டர்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.
சோமேட்டோ தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு குவிந்த ஆர்டர்களை சமாளிப்பதற்காக பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். கோக் கேன்களையும், உணவுப் பார்சல்களையும் ஒரு பொதியைப் போன்று சுமந்து கொண்டு சோமேட்டோ டெலிவரி பாய்ஸ் சளைக்காமல் டெலிவரி செய்து கொண்டிருந்தனர்.
இது தொடர்பான போட்டோக்களை தீபிந்தர் கோயல் சமூக தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்தியாவின் விருந்து தொடங்குவதற்கு தயார் என்று அந்தப் படங்களுக்குப் பெயரிட்டிருந்தார்.
டிசம்பர் 31 ஆம் தேதியன்று சோமேட்டோ செய்த சாதனை டெலிவரிகளையும் அதற்காக இந்திய மக்கள் தந்த ரூ.97 லட்சம் டிப்ஸ் பற்றியும் பாராட்டி நன்றி தெரிவித்த சோமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் ஒரு வெளிப்படையான மனிதர்.
சோமேட்டோவின் தள்ளுபடி ஆபர்கள் நேர்மையானவை அல்ல என்று எழுந்த விமர்சனம் குறித்து அவர் பேசுகையில் ஆம். அந்த ஆபர்கள் நேர்மையானவை அல்ல. இதுபற்றி வாடிக்கையாளர்கள் தரப்பில் நீண்டநாட்களாக புகார்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டு மக்களை ஆச்சரியப்படுத்தினார்.
இது தொடர்பாக யூடியூபர் ரண்வீர் அல்லாபாடியாவின் பிரபல பாட்காஸ்ட்டான தி ரண்வீர் ஷோவில் பங்கேற்று கோயல் பேசியபோது, சோமேட்டோவின் தள்ளுபடிகள் ஒன்றும் பெரிய அளவில் இல்லை.
எடுத்துக்காட்டாக ரூ.80 வரை 50 சதவீத தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டிருக்கும். உண்மையில் நீங்கள் ரூ.400க்கு ஆர்டர் செய்தால்தான் ரூ.80 தள்ளுபடி கிடைக்கும். இது 50 சதவீத தள்ளுபடி அல்ல. வெறும் 20 சதவீதம்தான். இதுபோன்ற தள்ளுபடி ஆபர்கள் வாடிக்கையாளர்களை திசை திருப்புகிறது. ஆனால் போட்டியாளர்கள் இதேமுறையைப் பின்பற்றிவரும் போது என்னால் அதை மாற்றம் செய்ய முடியாது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications