இந்திய மக்கள் அதிகப்படியாக கிரெடிட் கார்டு பயன்படுத்த துவங்கியுள்ளனர், கிரெடிட் கார்டுக்கு எப்போதும் இரண்டு முகம் உண்டு. ஒன்று ஹீரோ மற்றொன்று வில்லன். கிரெடிட் கார்டையும் அதன் சலுகைகளையும் சரியாக புரிந்துக்கொண்டு பயன்படுத்தி, உரிய நேரத்தில் அதாவது 30 - 45 நாட்களுக்கு பயன்படுத்திய முழு தொகையும் செலுத்திவிட்டால் கிரெடிட் கார்டு ஹீரோ தான்.
இதுவே கிரெடிட் கார்ட் மூலம் பயன்படுத்திய பணத்தை உரிய நாளில் செலுத்தாமல், மினிமம் பேலென்ஸ் மட்டுமே செலுத்தி அதிக வட்டியை செலுத்தி வந்தால் கிரெடிட் கார்டு போல் மிகப்பெரிய வில்லன் எதுவுமே இல்லை. இப்படியிருக்கும் போது ஆர்பிஐ வெளியிட்டுள்ள ரிப்போர்ட் அசிர்ச்சியை அளிக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது, இது இந்தியாவில் நுகர்வோர் செலவிடும் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றத்தைக் காட்டுகிறது. இந்திய மக்கள் மிகவும் கட்டுப்கோப்பாக சேமிப்பையும், முதலீட்டையும் சார்ந்து நிதி ஆதாரத்தை உருவாக்கும் நிலை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது என்பதை இந்த கிரெடிட் கார்ட் பயன்பாடு காட்டுகிறது.
2021 மார்ச் மாதத்தில் ரூ.6.30 லட்சம் கோடியாக இருந்த கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளின் மதிப்பு, கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீண்டு வந்ததையும், கடந்த சில காலாண்டுகளில் மக்களின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதையும் பிரதிபலிக்கும் விதமாக 2024 மார்ச் மாதம் முடிந்த ஆண்டில் ரூ.18.31 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும்.
ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளின் மதிப்பு 2021ல் ரூ.6.30 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2022 மார்ச் மாதம் முடிந்த ஆண்டில் ரூ.9.71 லட்சம் கோடியாகவும், 2023 மார்ச் மாத முடிவில் ரூ.14.32 லட்சம் கோடியாகவும், 2024 ஆம் நிதியாண்டின் இறுதியில் ரூ.18.31 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இதேபோல் தற்போது கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் சராசரி மாத செலவு ரூ.1.50 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது, மேலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.164,459 கோடியாக இருந்தது. இது 2021 மார்ச் மாதத்தில் ரூ.72,319 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி தரவுகளின் படி, வங்கிகளால் வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்துள்ளது. 2021 மார்ச் மாதத்தில் 6.20 கோடியாக இருந்த கிரெடிட் கார்ட் சர்குலேஷன் எண்ணிக்கை, 2022 மார்ச் மாதத்தில் 7.36 கோடியாகவும், 2023 மார்ச் மாதத்தில் 8.53 கோடியாகவும், 2024 மார்ச் மாத நிலவரப்படி 10.18 கோடியாக உயர்ந்துள்ளது.
இவை அனைத்தையும் விட முக்கியமாக வங்கிகள் கிரெடிட் கார்ட் மூலம் வழங்கும் கடன் தொகைக்கான கட்டண காலம் முடிந்த பின்னர், அதாவது 30-45 நாட்கள் interest-free period தாண்டி வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய நிலுவைத் தொகை (card outstanding) 2022 ஆம் ஆண்டில் ரூ.161,512 கோடியாக இருந்த நிலையில், 2024 மே மாதத்தில் ரூ.267,979 கோடியாக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications