பிரிட்டனில் வீடுகள் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களை பயன்படுத்திய இந்திய செல்வந்தர்கள் குறித்து அமலாக்க துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
பொதுவாக இந்தியாவை சேர்ந்தவர்கள் வெளிநாட்டில் சொத்துக்களை நேரடியாக வாங்க அனுமதி வழங்கப்படுகிறது, அதாவது ஒரு ஆண்டுக்கு 2.50 லட்சம் டாலர்கள் வரை இவர்கள் பணம் அனுப்பி குறிப்பிட்ட நாடுகளில் சொத்துக்களை வாங்க அரசு அனுமதி தருகிறது. ஆனால் வெளிநாட்டில் சொத்துக்களை வைத்திருக்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது அந்நிய செலாவணி விதிமுறைகளுக்கு புறம்பானது.

ஆனால் இந்தியாவை சேர்ந்த செல்வந்தர்கள் பலரும் அரசுக்கு தெரிவிக்காமல் முறைகேடாக முத்திரை வரி, மூலதன ஆதாயங்கள் மற்றும் சொத்துவரி ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் நோக்கில் வெளிநாட்டில் சொத்துக்களை வைத்திருக்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வைத்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.
எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு வெளிநாட்டவர்கள் தங்கள் நாடுகளில் முறைகேடாக முதலீடு செய்வதற்கு பயன்படுத்தும் வழிமுறைகளை கண்டுபிடித்து யாரெல்லாம் எந்தெந்த நிறுவனங்கள் வழியே பங்குகளை வாங்கியுள்ளனர் என்ற விவரங்களை பிரிட்டன் திரட்டி இருப்பதாக கூறுகிறது.
பிரிட்டன் அரசு இந்த விவரங்களை மத்திய அரசிடம் பகிர்ந்திருப்பதாகவும், இதன் மூலம் தான் இந்தியாவை சேர்ந்த பல செல்வந்தர்களும் அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறி பங்குகளை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது என்றும் அந்த செய்தி கூறுகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் நான்கு பேருக்கு இது தொடர்பாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தெரிகிறது.
குறிப்பிட்ட நிறுவனங்கள் பிரிட்டனில் சொத்துக்களை வைத்திருக்கின்றன என்றும் அதில் இவர்கள் முறைகேடாக முதலீடு செய்து பங்குகளை வாங்கி இருக்கின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் பெரும்பாலான செல்வந்த இந்தியர்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகளை மேற்கொள்வதால் அரசாங்கம் இந்த விதிமுறைகளில் சில தளர்வுகளை கொண்டு வர வேண்டும் என சில செல்வந்தர்கள் கோரிக்கை விடுகிறார்களாம்.
2022 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக ஒரு தெளிவான வழிகாட்டுதலை வெளியிட்டது. அதில் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு சொத்துக்களை வாங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
நிதி, சேவைகள் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் பட்டியலிடப்படாத பங்குகளை இந்தியாவை சேர்ந்த தனிநபர் வாங்க முடியாது. உற்பத்தி வர்த்தகம் அல்லது மென்பொருள் மேம்பாடு போன்றவற்றில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் என்றும் அந்த நிறுவனங்களின் பணியாற்றும் அதிகாரிகளுக்கு தங்கும் நோக்கத்திற்காக சொத்துக்களை வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வெளிநாட்டில் சொத்துக்களை பெரும்பாலும் சொந்தமாக கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தில் பங்குகளை வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இது இந்தியர்கள் அரசாங்கத்துக்கு தெரியாமல் வெளிநாட்டில் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபடுவதை தடுக்கிறது. இருந்தாலும் பல இந்தியர்கள் இந்த விதிகளை மீறி முதலீடு செய்துள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications