2022-23 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கையை 99 சதவீதம் பேர் தாக்கல் செய்த நிலையில், பல முக்கியமான தரவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் முக்கியமாக கொரோனா தொற்றுக்கு பின்பு பலர் பல நிறுவனங்களுக்கு மாறிய நிலையில் பெரும்பாலானோரின் சம்பளம் உச்சத்தை அடைந்துள்ளது.
2022-23 நிதியாண்டில் 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுவதற்காக சுமார் 2.69 லட்சத்துக்கும் அதிகமானோர் வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர், இது கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய 2018-19 ஆண்டை ஒப்பிடுகையில் 49.4 சதவீதம் அதிகமாகும்.

வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் தரவுகளின்படி 2022-23 நிதியாண்டில் 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி 2.69 லட்சம் வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இது 2021-22 ஆம் நிதியாண்டில் 1.93 லட்சமாகவும், 2018-19 ஆம் நிதியாண்டில் 1.80 லட்சமாகவும் உள்ளது.
இதேநேரத்தில் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் கொண்டவர்கள் தாக்கல் செய்யும் வருமான வரி அறிக்கைகளின் எண்ணிக்கை 1.4 சதவீதம் வரையில் மட்டுமே அதிகரித்துள்ளது. இப்பிரிவில் 2022-23 ஆம் நிதியாண்டில் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துடன் அறிக்கை தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 4.97 கோடி, 2021-22 ஆம் நிதியாண்டில் 4.75 கோடி, 2020-21 ஆம் நிதியாண்டில் இதன் எண்ணிக்கை 5.68 கோடியாகும்.
மாநில வாரியாக பார்க்கும் போதும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சுமார் 1.12 கோடி பேர் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர், உத்தர பிரதேசத்தில் இதன் எண்ணிக்கை 75.72 லட்சமாக உள்ளது, குஜராத்தில் இருந்து 75.62 லட்சம் பேரும், ராஜஸ்தானில் 50.88 லட்சம் பேரும் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
இதில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கொண்டவர்களாக தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 0.3 சதவீதமாக உள்ளது. இதே மொத்த வருமான வரி அறிக்கையில் 5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் கொண்டவர்களின் அளவு 72.6 சதவீதமாகும்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications