இந்தியாவில் அடுத்த 5 வருடத்திற்கான நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19, 2024 முதல் துவங்கி நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூன் 4, 2024 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இத்தேர்தல் மூலம் நாட்டின் டெக் துறை வளர்ச்சிக்கான முக்கியமான திட்டம் தடைபெற்றுள்ளது எத்தனை பேருக்குத் தெரியும். ஒட்டுமொத்த உலகமும் ஏஐ துறை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் போது, இத்துறைக்காக அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் தற்போது தேக்கம் அடைந்துள்ளது.

மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற மிக முக்கியமானது இந்த India AI Mission திட்டம். மத்திய அரசு ₹10,372 கோடி ரூபாய் மதிப்பிலான India AI Mission திட்டத்தை அறிவித்தது.
இத்திட்டத்தின் கீழ், பொது-தனியார் கூட்டு முயற்சியின் மூலமாக 10,000 GPUக்களை அரசு நிறுவனங்கள் செயல்பாட்டில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், உலக அளவில் GPUக்களை நிறுவனங்களும், அரசாங்க நிறுவனங்களும் பெருமளவில் பயன்படுத்துகின்றன.
செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவை முன்னேற்றுவதற்காக ₹10,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் கீழ் அமெரிக்காவின் கிராபிக்ஸ் ப்ராசஸிங் யூனிட் (GPU) தயாரிப்பாளரான என்விடியா (Nvidia) உடன் ஒப்பந்தம் செய்துகொள்ள இந்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியானது.
இதற்கு மத்தியில் என்விடியா தலைவர் கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவுக்கு நேரில் வந்து அரசு அதிகாரிகளையும், பல தலைவர்கள், தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
GPU எதற்காக: GPU என்பது கிராபிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தை வேகமாக செயல்படுத்தக்கூடியது. முதலில் இத்தகைய GPU-க்கள் கேமிங் விளையாடுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது AI துறையின் உயிர்நாடியாக உள்ளது. கணினி செயல்பாடுகளை வேகமாக செய்யக்கூடிய மைக்ரோசிப் தான் இந்த GPU. இந்த துறையில் என்விடியா நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.
மத்திய அரசு இலக்கு: India AI Mission மூலம் செய்யப்படும் ஒப்பந்தத்தின் மூலம் என்விடியா நிறுவனத்திடம் இருந்து மலிவு விலையில் GPUக்களை பெற்று, இந்திய ஸ்டார்ட்அப்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பயனர்களுக்கு மானிய விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.
தற்போது இந்த திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், தேர்தலுக்கு பிறகு இது குறித்த முடிவு எடுக்கப்படலாம் என்றும் விபரம் அறிந்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், GPU சந்தையில் என்விடியா நிறுவனம் பெரும்பான்மை பங்கை கொண்டிருப்பதால், இந்திய அரசுக்கு இந்நிறுவனம் சிறந்த தேர்வாக இருக்கும்.
உலகளாவிய போட்டி: செயற்கை நுண்ணறிவு துறையில் கணினி கட்டமைப்பை உருவாக்குவது என்பது உலக நாடுகளுக்கு இடையே ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக மாறியுள்ளது. ஒவ்வொரு நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் தேசியப் பாதுகாப்பு தேவைகளுக்காக கணினி திறனை மேம்படுத்தப் பல பில்லியன் டாலர்களை செலவிட்டு வருகின்றன.
எடுத்துக்காட்டாக, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஏற்கனவே என்விடியா நிறுவனத்தின் சக்தி வாய்ந்த H100 சிப்கள் உட்பட பல்வேறு வகையான GPUக்களை வாங்கத் தொடங்கிவிட்டன. சீனாவுக்கு இந்த சக்தி வாய்ந்த சிப்புகள் கிடைப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க அரசு பல தடைகளை விதித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
GPU தயாரிப்பில் என்டிவிடியா நிறுவனத்தைப் போல் யாரும் இல்லாத நிலையில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.16 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே அதிக மதிப்புடைய நிறுவனங்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள்-க்கு அடுத்தபடியாக என்விடியா உள்ளது.
இந்தியாவில் ரிலையன்ஸ், டாடா, yotta போன்ற நிறுவனங்கள் என்விடியா உடன் ஒப்பந்தம் செய்து சக்தி வாய்ந்த ஜிபியூ-க்களை வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications