2025 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் இருக்கிறோம். இப்போதுதான் இந்த ஆண்டு தொடங்கியது போல இருக்கிறது. ஆனால் அதற்குள் புது ஆண்டு பிறக்கப்போகிறது. 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் பல்வேறு முக்கியமான நிகழ்வுகள் நடந்தன.
இந்த ஆண்டு கூகுளில் எந்த விஷயம் குறித்து மக்கள் அதிகமாக தேடினார்கள் என்பது குறித்து கூகுள் நிறுவனம் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறது. ஆபரேஷன் சிந்தூரில் தொடங்கி ஐபிஎல் போட்டி, கூலி படம், இட்லி ரெசிபி என இந்தியர்களின் தேடுதல் பட்டியல் நமக்கு ஆச்சர்யத்தை தருகிறது.

A- Z என்ற முறையில் கூகுள் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. ஏஐ தொடர்பான தேடுதலில் இந்தியர்கள் அதிகமாக கூகுளின் ஜெமினி , ஜெமினி ஏஐ போட்டோ , குரோக், டீப் சீக், பெர்பிளெக்சிட்டி, சாட் ஜிபிடி கிப்ளி ஆர்ட் படம் ஆகியவற்றை தான் அதிகமாக தேடி இருக்கிறார்கள்.

அடுத்ததாக திரைப்படங்களின் பட்டியல் என வரும்போது இந்தியர்கள் அதிகமாக பாலிவுட் படமான சயாரா குறித்து தான் கூகுளில் தேடி இருக்கிறார்கள் . இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது காந்தாரா லெஜன்ட் சாப்டர் 1 திரைப்படம். நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடிய திரைப்படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது .

நிகழ்ச்சிகள் என பார்க்கும்போது ஸ்குவிட் கேம் குறித்து இந்தியர்கள் அதிகமாக கூகுளில் தேடியிருக்கிறார்கள். அதே பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியர்கள் அதிகம் தேடிய நிகழ்ச்சிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அடுத்ததாக ரெசிபி அதாவது உணவு என வரும்போது இந்தியர்கள் அதிகம் தேடிய உணவு இட்லிதான். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இட்லி , அடுத்ததாக யுகாதி பச்சடி, பீட்ரூட் கஞ்சி, திருவாதிரை களி , கொழுக்கட்டை குறித்தும் இந்தியர்கள் இந்த ஆண்டு அதிகமாக கூகுளில் தேடியிருக்கிறார்கள் .
இது மட்டும் இல்லாமல் இந்தியர்கள் அதிகமாக தேடிய விஷயங்களில் காஷ்மீரில் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், அதை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்த ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் போர் நிறுத்தும் குறித்தும் அதிகமாக இந்தியர்கள் கூகுளில் தேடி இருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா குறித்தும் இந்தியர்கள் அதிகமாக கூகுள் செய்திருக்கிறார்கள். அது தவிர லாபுபு பொம்மை குறித்து பலரும் தேடி இருக்கிறார்கள் என கூகுள் செய்தி கூறுகிறது. மகா கும்பமேளா, நானோ பனானா சாரி டிரெண்ட், கிப்ளி ஆர்ட் படங்ஜள், சுனிதா வில்லியம்ஸ், ஐபிஎல் போட்டிகள், வைபவ் சூர்யவம்சி என்ற இளம் கிரிக்கெட் வீரர், 67 வைரல் மீம்ஸ் ஆகியவையும் இந்தியர்கள் அதிகமாக தேடிய விஷயங்களின் பட்டியலில் உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications