இன்று வரையில் பலரும் GenZ தலைமுறையை விமர்சனம் செய்து வரும் வேளையில் டெல்லியில் நடந்த போராட்டம் ஒரு முக்கியமான துவக்கத்தின் ஆரம்பமாக பார்க்கப்படுகிறது. இனி ஜென்Z தலைமுறையினர் தான் நாட்டின் அரசியல், சினிமா, வர்த்தகம், பொருளாதாரத்தை தீர்மானிப்பார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால் அது தான் உண்மை.
ஒரு நாடு முழுவதும் ஒரே தலைமுறையை சேர்ந்தவர்களாக இருந்தால் எப்படியிருருக்கும், இப்படி தான் இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் ஜென்Z தலைமுறையை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதை இன்னும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை காட்டிலும் இந்தியாவில் ஜென்Z தலைமுறையினரின் மக்கள் தொகை அதிகம்.

இந்தியாவின் 147 கோடி பேர் மக்கள் தொகையில் 14-19 வயதுடைய மக்களின் எண்ணிக்கை 40 கோடி இதுகிட்டத்தட்ட 30 சதவீத மக்கள் தொகை. இதைவிட முக்கியமான விஷயம் இனி எந்தொரு தலைமுறையும் இத்தகைய அதிக மக்கள் தொகையை பெற முடியாது என்பதே கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.
கடந்த 10 வருடத்தில் இந்தியாவில் வருடம் 27 மில்லியன் குழந்தைகள் பிறந்து வந்தனர். ஆனால் தற்போது 22 மில்லியனாக குறைந்துள்ளது. 2020 வாக்கில் இந்தியாவில் fertility rate குறைந்த காரணத்தால் இனி வரும் காலத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் அதாவது GenZக்கு பின்பு வரும் அனைக்கு தலைமுறையிலும் மக்கள் தொகை குறைவாக தான் இருக்கும்.
எனவே GenZ தலைமுறையினர் தான் இந்தியாவில் அடுத்த 20-25 வருடத்திற்கு அதிக மக்கள் தொகை கொண்ட பிரிவாக இருக்கும். சரி இதனால் என்ன நடக்கும்..? உண்மையில் இவர்களால் தான் இனி எல்லாமே நடக்க போகிறது.
முதல் விஷயம் இந்தியாவின் அடுத்த WorkForce இவர்கள் தான், இவர்களை வைத்து தான் நாட்டின் பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் மேம்படுத்த முடியும். இதனால் நிறுவனத்தின் கொள்கை, திட்டங்கள், வசதிகள் அனைத்தும் ஜென்Z-யை தக்கவைப்பதற்காக உருவாக்கப்படும்.
அடுத்த விஷயம் இவர்கள் தான் இனி செலவு செய்யும் மக்கள் பிரிவாக இருப்பார்கள், இதனால் இவர்களின் தேவையின் அடிப்படையில் தான் அனைத்து வர்த்தகமும், சேவைகளும் உருவாக்கப்படும்.
ஏன் அரசு கொள்கையும், அரசியல் தலைவர்களும் இவர்களை ஈர்க்கும் படியில் இருக்க வேண்டும்.. இல்லையெனில் தலைவர்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். காரணம் 400 மில்லியன் மக்கள் என்பதால் வாக்கு உரிமையிலும் இவர்களின் பங்கு அதிகமாக இருக்கும் தேர்தலில் Deciding Factor ஆகவும் இருப்பார்கள்.
இதேபோல் சினிமா, விளையாட்டு, பேஷன், தொழில்நுட்பம், சமுக வலைத்தளம் என அனைத்தும் ஜென்Z-யினரை ஈர்க்கும் வகையில் தான் அமையும். இதனால் பொருளாதாரம், நுகர்வோரின் செலவின பழக்கம், வேலைவாய்ப்பு சந்தை என அனைத்தும் ஜென்Z சார்ந்தே இருக்கப்போகிறது. இதனால் மற்ற தலைமுறையினரும், அவர்களுக்கான சேவையும் மைனாரிட்டியாக மாறும்.
இதுநாள் வரையில் ஒவ்வொரு நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக கூட்டத்தில் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு நாம் எப்படி சேவை அளிக்கப்போகிறோம் என்ற கேள்வி எழும்..? ஆனால் இவரும் காலத்தில் இந்தியாவின் அதிகப்படியான மக்கள்தொகை கொண்ட ஜென்Z தலைமுறையினரை எப்படி வெல்லப்போகிறோம்..? என்ற கேள்வி தான் இருக்கும்.
இந்த மாறுப்பட்ட கேள்வி வர்த்தகத்தின் நோக்கம், போக்கு என அனைத்தையும் மாற்றிவிடும் என்பது தான் உண்மை.


Click it and Unblock the Notifications
