இந்திய ரியல் எஸ்டேட் துறை கடந்த 5 வருடத்தில் மிகவும் முக்கியமான மாற்றத்தை கண்டு வருகிறது. ஒருபக்கம் புதிய நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அலுவலக இடம், ஐடி பார்க், மால், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆகியவற்றில் அதிகம் முதலீடு செய்து வருகிறது.
மறுபுறம் ரெசிடென்ஷியல் துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் என்ஆர்ஐ முதலீட்டாளர்களையும், பெரும் முதலீட்டாளர்களையும், HNI, DINK மக்களை அதிகம் கவரும் வகையில் ஆடம்பர வீட்டு திட்டங்களில் தான் கவனத்தை செலுத்தி வருகிறது. இதன் விளைவாக மிடில் கிளாஸ் மக்கள் சொத்து வீட்டை வாங்க வேண்டும் என்ற கனவு வெறும் கனவாகவே மாறும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் மலிவு விலை வீடுகள் வருகை வேகமாக குறைந்து வருகின்றன. ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் பிரீமியம் மற்றும் ஆடம்பர திட்டங்களுக்கு மாறி வரும் காரணத்தால் வீடு கடன் வழங்கும் நிறுவனங்களும் தனது வர்த்தக திட்டங்களை மறுஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என ஆன்டிக் ஸ்டாக் ப்ரோக்கிங் நடத்திய பிஎஃப்எஸ்ஐ மாநாடு 2025 அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியஸ் எஸ்டேட் நிறுவனங்களின் மாற்றம்
பொதுவாக வீடு கட்டும் நிறுவனங்கள் அதிகளவில் பட்ஜெட் விலை வீடுகளுக்கு தான் முக்கியதுவம் கொடுக்கும், ஆனால் இப்போது 50 லட்சம் ரூபாய்க்கு கீழ் விலையுள்ள வீடுகளை கட்ட ஆர்வம் காட்டுவதில்லை. ஏன் இந்த நிலை, திட்டமிட்டு இது செய்யப்படுகிறதா..?
இந்தியாவின் முக்கிய நகரங்களில் நில விலை உயர்வு, சிறிய வீடுகளின் விற்பனையில் குறைந்த லாப அளவு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வும்- மிடில் கிளாஸ் மக்கள் மத்தியில் வருமானம் பெரிய அளவில் அதிகரிக்காத நிலை, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் புதிய விதிகளால் கிடைக்கும் சலுகைகள் குறைந்தது ஆகியவை இதற்கு காரணங்களாகும்.
மும்பை போன்ற நகரங்களில் நிலத்தின் விலை பெரிதும் உயர்ந்ததால் மலிவு வீடு திட்டங்கள் லாபகரமாக இல்லை என ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் கூறிகின்றனர். இதனால் பணக்கார வாடிக்கையாளர்களை குறிவைத்து ஆடம்பர திட்டங்களுக்கு மாறியுள்ளனர்.
வீடு கடன் வழங்குநர்களின் சவால்
இதேபோல் வங்கிகளும், வீடு கடன் நிறுவனங்களும், மலிவு வீடுகள் பிரிவில் வளர்ச்சி என்பது மிகவும் குறைவாக இருப்பதாகவும், மலிவு வீடு கடனுக்கு தேவையான நுண்ணளவு ஆய்வுக்கு பெரிய வங்கிகளின் கட்டமைப்பு லாபகரமாக இல்லை எனவும், இதனால் கோ-லெண்டிங் கூட்டாணியில் இதை செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
இதனால் வங்கிகள் அளவிலும் மலிவு விலை வீட்டு திட்டங்கள் மீது தனிப்பட்ட கவனத்தை செலுத்துவதை குறைத்துள்ளது. ஆயினும் வங்கிகள் மக்களுக்கு கடன் அளிப்பதை மறுப்பது கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டது. சந்தையில் மலிவு வீடுகளுக்கு தேவை இருந்தாலும் விநியோகம் குறைந்து வருகிறது.
அதே நேரம் வங்கிகளில் தற்போது 2 முதல் 3 கோடி ரூபாய் விலையுள்ள வீடுகளுக்கு தேவை அதிகமாகியுள்ளது. இதனால் புதிதாக வீடு வாங்குவோருக்கு 50 லட்சம் ரூபாய்க்கு குறைவான விலையில் பெரு நகரங்களில் வீடு கிடைப்பது குறைந்துள்ளது. அப்படி கிடைத்தாலும் நகரின் வெளி பகுதியில் தான் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications