AI போர்வையில் இந்தியாவுக்கு வரும் பூதம்..? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

மத்திய அரசு நடத்திய இந்தியா AI இம்பாக்ட் சம்மிட் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி AI நிறுவன CEOக்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளுக்கு முதலீடு உறுதியளிக்கப்பட்டது.

ரிலையன்ஸ், அதானி, மைக்ரோசாஃப்ட், கூகுள், டாடா, ஓபன் AI, ஆன்த்ரோபிக் போன்ற நிறுவனங்கள் அனைத்தும் ஏஐ மற்றும் ஏஐ சார்ந்த துறையில் முதலீடு செய்வது, அலுவலகம் திறப்பது, சேவை விரிவாக்கம், ஊழியர்கள் பணியில் அமர்த்தல் என பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தியது.

AI போர்வையில் இந்தியாவுக்கு வரும் பூதம்..? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

இந்த முதலீடுகளும், அறிவிப்புகளும் இந்தியாவை AI சக்தி நாடாக மாற்றும் என பலர் கொண்டாடுகின்றனர். ஆனால் இந்த கொண்டாட்டத்தின் பின்னால் உள்ள சில உண்மைகளை பார்க்க வேண்டும் என profshinybeard தனது இன்ஸ்டா வீடியோவில் பதிவிட்டார், இதை பல திக்விஜய சிங் உட்பட பலரும் இணையத்தில் பகிர்ந்தனர்.

AI தொழில்நுட்பம் பெரிய கட்டிடங்களில் அமைக்கப்படும் டேட்டா சென்டர்கள் மூலம் இயங்குகிறது. இதற்கு மலிவான நிலம், மலிவான மின்சாரம், திறமையான தொழிலாளர்கள் மற்றும் மிக அதிக அளவு தண்ணீர் தேவை. வெளிநாட்டு நிறுவனங்களின் ஏஐ துறை வளர்ச்சிக்கு இந்தியா இவற்றை அளித்தது மட்டும் அல்லாமல் 21 ஆண்டுகள் வரி விலக்கு கொடுத்து, வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கிறது.

ஆனால் AI அல்காரிதம், அறிவுசார் உரிமை (IP) மற்றும் லாபம் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்கிறது. இந்தியாவுக்கு இதன் மூலம் சில லட்சம் வேலைவாய்ப்புகள், இத்துறையில் முதலீடு செய்வோருக்கு சிறிய அளவிலான லாபம் ஆகியவை கட்டாயம் கிடைக்கும். இதன் மூலம் டெக் துறை சேவையில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செய்ய முடியும். ஆனால் உண்மையில் இதில் இந்தியா இழப்பது என்ன என்பது தான் தற்போதைய முக்கியமான கேள்வி.

AI போர்வையில் இந்தியாவுக்கு வரும் பூதம்..? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

AI டேட்டா சென்டர்களின் உண்மைத் தேவை
AI 'கிளவுட்' என்று சொல்லப்படுவது உண்மையில் பெரிய கட்டிடங்களில் இயங்கும் சர்வர்கள். ஒரு பெரிய AI டேட்டா சென்டர் ஒரு நாளைக்கு 30,000 மக்கள் உள்ள நகரத்தின் அளவு தண்ணீரை பயன்படுத்துகிறது. சாட்ஜிபிடியில் 100 வார்த்தை ப்ராம்ப்ட் டைப் செய்தாலே கூலிங்குக்கு 0.5 லிட்டர் தண்ணீர் செலவாகும்.

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் டேட்டா சென்டர்கள் 350 பில்லியன் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தும் என கணிக்கப்படுகிறது. இந்த டேட்டா சென்டர்கள் மும்பை, சென்னை, ஹைதராபாத் போன்ற நீர் பற்றாக்குறை உள்ள நகரங்களில் கட்டப்படுகின்றன. இந்தியாவில் 163 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. இந்த சூழலில் AIக்காக தண்ணீரை வீணடிப்பது சரியா என கேள்வி எழுகிறது.

21 ஆண்டு வரி விலக்கு - இந்தியாவுக்கு என்ன லாபம்?
அரசு பட்ஜெட்டில் வெளிநாட்டு கிளவுட் நிறுவனங்களுக்கு இந்திய டேட்டா சென்டர்களில் 21 ஆண்டுகள் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது AI நிறுவனங்களை ஈர்க்கிறது. ஆனால் இந்தியா தன் நிலம், மின்சாரம், தண்ணீர், திறமையான இளைஞர்களை அளிக்கிறது. அவர்கள் தங்கள் சர்வர்கள், அல்காரிதம் கொண்டு வருகின்றனர். ஆனால் அறிவுசார் உரிமை மற்றும் லாபம் அவர்களிடமே இருக்கும்.

ரிலையன்ஸ்-ஆன்த்ரோபிக் கூட்டணி போன்றவை தொழில்நுட்ப கூட்டு அல்ல; நிலம், மின்சாரம் அளிக்கும் 'லேண்ட்லார்ட்' ஒப்பந்தம் மட்டுமே. இது இந்தியாவை AI சக்தி நாடாக மாற்றுமா? அல்லது உலகின் 'சர்வர் ரூமாக' மாற்றுமா? பழங்காலத்தில் வளங்கள், உழைப்பை கொடுத்து வெளியாரின் செல்வத்தை சேமித்த நிலை இது போன்றது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற நகரங்களின் நிலை
தமிழ்நாட்டில் சென்னை போன்ற நகரங்கள் டேட்டா சென்டர்களுக்கான முக்கிய இடங்களாக உள்ளன. ஆனால் சென்னை ஏற்கெனவே நீர் பற்றாக்குறை உள்ள நகரம். கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சினை. இதேபோல் தான் ஐடி நகரமான பெங்களூரும், கோடை காலம் வந்துவிட்டாலே தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடும் ஒரு நகரமாக உள்ளது.

AI சென்டர்கள் வந்தால் தண்ணீர் உபயோகம் அதிகரித்து, உள்ளூர் மக்களின் குடிநீர் தேவை பாதிக்கப்படலாம். இதற்கான மாற்று ஏற்பாடுகளை இந்திய நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் செய்கிறதா..?

AI முதலீடு வேலைவாய்ப்பு அளிக்கலாம் என்றாலும், நீர் வளத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். சென்னை, திருவள்ளூர் போன்ற இடங்களில் புதிய சென்டர்கள் கட்டப்படுமானால், உள்ளூர் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படலாம். அரசு இந்த முதலீடுகளை ஈர்க்கும் போது, தமிழகத்தின் நீர் வளத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

மின்சார பிரச்சனை
இந்தியா இன்னும் மின்மிகை நாடாக இல்லை, இன்றும் நாட்டின் பல நகரங்களிலும், கிராமங்களிலும் மின்சார தடை இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 வருடத்தில் சோலார் மின்சாரம் உற்பத்தி பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையிலும் இந்த மின்தடை பிரச்சனையை தீர்க்கப்படவில்லை.

மேலும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் டேட்டா சென்டர் அதிகமுள்ள மாநிலங்களில் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் மக்கள் வீடுகளில் பயன்படுத்தும் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளது. இதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என டிரம்ப் உத்தரவிட்ட காரணத்தால் அவசர அவசரமாக கூகுள், மைக்ரோசாப்ட் உட்பட அனைத்து ஏஐ நிறுவனம் மின்சார செலவுகளில் நெட் ஜீரோ அளவை அடைய முதலீடு செய்து வருகின்றனர்.

இதேவேளையில் இந்த நிறுவனங்கள் இந்தியாவில் டேட்டா சென்டருக்காக முதலீடு செய்து வருகிறது. இந்தியாவில் மின்சார கட்டணம் உயராமல் இருக்க டேட்டா சென்டர் முதலீடுகளை ஈர்க்க ஆர்வம் காட்டும் மத்திய மாநில அரசுகள் என்ன செய்கிறது என்பது அடுத்த முக்கியமான கேள்வி.

AI போர்வையில் இந்தியாவுக்கு வரும் பூதம்..? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

AI முதலீடு - உண்மையான பார்வை
இந்த முதலீடுகள் இந்தியாவை AI துறையில் முன்னேற்றும் என்பது உண்மை. ஆனால் இந்தியா வெறும் வளங்களை அளிப்பதோடு நிறுத்திவிடக் கூடாது. தொழில்நுட்பம், அறிவுசார் உரிமை, லாபத்தில் பங்கு பெற வேண்டும். இல்லையெனில் இது 'பார்ட்னர்ஷிப்' ஆக இருக்காது, வெறும் 'லேண்ட்லார்ட்' நிலை வந்துவிடும்.

இந்தியா தன் இளைஞர்களின் திறமை, ஸ்டார்ட்-அப்கள், புதுமையை பயன்படுத்தி உண்மையான AI சக்தி நாடாக மாற வேண்டும். இந்த சம்மிட் இந்தியாவுக்கு வாய்ப்பு அளிக்கிறது, ஆனால் அதை சரியாக பயன்படுத்த வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+