ஆகஸ்ட் மாத பணவீக்கம் 2% மேல் பதிவாகியுள்ளதால், அக்டோபரில் வட்டி குறைப்பிற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாக SBI ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. இது வீட்டு கடன், வாகன கடன் வாங்கி இருப்பவர்களை கலக்கமடைய வைத்துள்ளது.
ஜிஎஸ்டி விகித மாற்றங்கள், உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கத்தை 40-45 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கலாம் கணித்துள்ள எஸ்பிஐ, 50% பலன்கள் நுகர்வோரை சென்றடையும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் இதனை கூறுவதாக தெரிவித்துள்ளது.

சுமார் 295 அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களை அரசு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அல்லது பூஜ்ஜியமாக குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு, பொருட்களின் பணவீக்கத்தை 25-30 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கலாம். இது 60% நுகர்வோருக்குச் சென்றடையும் என்ற அனுமானத்தில் எஸ்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜூலை 2025இல் 98 மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.55 சதவீதமாக சரிந்த இந்தியாவின் சில்லறை பணவீக்கம் (CPI), ஆகஸ்டில் 2.07 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், உணவு மற்றும் பானங்களின் விலை உயர்வு ஆகும். உணவு மற்றும் எரிபொருள் விலைகளைத் தவிர்த்து கணக்கிடப்படும் முக்கிய பணவீக்கம் (Core inflation) 4.16 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கிராமப்புற பணவீக்கம் ஜூலை மாதத்தில் 1.18 சதவீதத்திலிருந்து 1.69 சதவீதமாகவும், நகர்ப்புற பணவீக்கம் 2.10 சதவீதத்திலிருந்து 2.47 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.ஆகஸ்ட் மாதத்தில், 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 26 இடங்களில் பணவீக்கம் 4% க்கும் குறைவாக இருந்தது. கேரளா மற்றும் லட்சத்தீவில் மட்டுமே பணவீக்கம் 6% க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
கேரளா மாநிலத்தில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரித்ததால், பணவீக்கம் 9.04% ஆக உயர்ந்தது. கேரளாவில் கிராமப்புற பணவீக்கம் 10.05% ஆகவும், நகர்ப்புற பணவீக்கம் 7.19% ஆகவும் பதிவாகியுள்ளது. அதே போல பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் போன்ற முக்கிய விவசாய மாநிலங்களில் பெய்த கனமழை, வரும் மாதங்களில் உணவுப் பொருட்கள் விநியோகத்தைப் பாதித்து, உணவு விலைகளை உயர்த்தக்கூடும்.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் தொடக்கத்தில் இந்தியா முழுவதும் இயல்பை விட 9% அதிகமாக மழை பதிவாகியுள்ளது. சில மாநிலங்களில் மிக அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயம் பாதித்து உணவு பொருட்கள் விநியோகமும் தட்டுபாட்டை சந்திக்கும் இது பொருட்களின் விலை உயர்வை அதிகரிக்கும்.
வரும் காலாண்டிலும் பணவீக்கம் அதிகமாகவே இருக்கும் என்பதால் இந்தியாவில் இனி வரும் மாதங்களில் ரெப்போ வட்டி விகித குறைப்பை எதிர்பார்க்க முடியாது என எஸ்பிஐ அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 1% வரை ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications