இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையாகவும், உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் முதன்மை விமானப் போக்குவரத்து சந்தைகளில் ஒன்றாகவும் உள்ளது. இந்திய விமான நிலையங்களில் மொத்த விமான பயணிகளின் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 15% அதிகரித்து, 2024-ஆம் நிதியாண்டில் 37.6 கோடியாக உள்ளது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து பயணிகள் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் 13% அதிகரித்து 30.6 கோடியாக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு விமானப் போக்குவரத்து பயணிகள் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் 22% அதிகரித்து 7 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்திய விமான நிலையங்களில் இதுவரை ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்காக செய்யப்பட்ட விமான சரக்கு போக்குவரத்தும் கடந்த நிதியாண்டில் 7% அதிகரித்துள்ளது. அதாவது சுமார் 33.7 லட்சம் டன்கள் உயர்ந்துள்ளது.
கிஃப்ட் நகரில் உள்ள சர்வதேச நிதி சேவை மையம் (IFSC) விமான நிறுவனங்களுக்கான குத்தகை மற்றும் நிதியளிப்பை ஊக்குவித்து வருகிறது. இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு ஏர் இந்தியா விமான நிறுவனம் புதிய விமானங்களை வாங்கியது.
மார்ச் 31, 2024 நிலவரப்படி, 27 நிறுவனங்கள் விமான குத்தகை பெறுவதற்காக பதிவு செய்துள்ளன. 20-க்கும் மேற்பட்ட விமானங்களை குத்தகைக்கு விட்டுள்ளன. இது இந்த துறையின் வளர்ச்சிக்கு நல்ல சான்றாக உள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு விமான போக்குவரத்து துறையின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கப்பட்ட விமான நிலைய சேவைகளும் முக்கியம். ஆனால் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் திறன் பெற்ற பணியாளர்களின் தேவை அதிகரிக்கும் என்ற கவலையும் இருக்கிறது.
இந்த துறையில் அதிக வாய்ப்புகள் உள்ளன. அரசு, தொழில் துறை நிறுவனங்கள் மற்றும் சர்வதேச கூட்டாளிகள் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். பொருளாதார வளர்ச்சியில் விமான போக்குவரத்து துறைக்கும் மிக முக்கிய பங்கு உள்ளது. அதுமட்டுமின்றி தொழில்துறை பங்குதாரர்கள், சர்வதேச கூட்டாளிகள் மற்றும் அரசின் உதவியும் இதற்கு தேவை என்பதே இத்துறையின் முக்கிய கருத்தாக இருக்கிறது.
கட்டமைப்பு, திறன் மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் முதலீடு செய்வதன் மூலம், இந்திய விமானப் போக்குவரத்து துறை மேலும் விரிவடைந்து, 2030 ஆம் ஆண்டிற்குள் உலக டிரோன் மையமாக இந்தியா திகழ வேண்டும் என்பதே இத்துறையின் முக்கிய எதிர்பார்ப்பு.


Click it and Unblock the Notifications