சமீபகாலமாக இந்தியா-வங்கதேசம் இடையிலான உறவு முன்பு இருந்த அளவுக்கு சுமூகமாக இல்லை. வங்கதேசத்தின் நடவடிக்கைகளே இதற்கு காரணம். அந்நாடு அண்மையில், இந்தியாவின் மதிப்பு கூட்டப்பட்ட சில பொருட்களை வடகிழக்கு மாநில எல்லைகள் மூலம் வங்கதேசத்துக்குள் அனுமதிக்க தடை விதித்தது. இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது. வங்கதேசத்தின் நடவடிக்கைக்கு பதிலடியாக, அந்நாட்டிலிருந்து ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய இந்தியா கட்டுபாடு விதித்துள்ளது.
கொல்கத்தா துறைமுகம்
வங்கதேசத்திலிருந்து ஆயத்த ஆடைகளை இனி கொல்கத்தா மற்றும நவ சேவா துறைமுகம் வழியாக மட்டுமே இந்தியாவுக்குள் கொண்டு வர அனுமதிப்பது என முடிவு செய்துள்ளது. மேகாலயா, அசாம், திரிபுரா மற்றும் மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில எல்லையில் தரை வழியாக எந்தவொரு பொருளையும் இந்தியாவுக்குள் கொண்டு வர (இறக்குமதி) மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், உள்நாட்டு ஜவுளித் தொழிலுக்கு ரூ,1,000 கோடிக்கு மேல் கூடுதல் வணிகம் கிடைக்கும் என்று இத்துறை நிபுணர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் பிமல் பெங்கானி கூறுகையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை, சீன துணிகளை பின்புறமாக இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில் இது 20 சதவீத இறக்குமதி வரியை வசூலிக்க வழிவகுக்கும்.
கடினம்
இறக்குமதி கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்தியாவை விட வங்கதேசத்துக்கு இழப்பு அதிகமாக இருக்கும். இந்தியா அதிகம் இழக்கப்போவதில்லை. நிலப் பாதையை காட்டிலும், கண்டெய்னர் மூலம் கடல் வழியாக இறக்குமதி செய்வது வங்கதேசத்திற்கு கடினமாக இருக்கும், அதற்கு 2 நாட்கள் ஆகும் என்று தெரிவித்தார்.
இந்திய வர்த்தக சபையின் தேசிய ஜவுளிக் குழுவின் தலைவர் சஞ்சய் கே ஜெயின் கூறுகையில், வங்கதேசத்திலிருந்து தரைவழி இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கக்கூடும். வங்கதேசத்திலிருந்து ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி மதிப்புள்ள ஆடைகளை இறக்குமதி செய்து வந்தோம். இப்போது, 1,000-2,000 கோடி மதிப்புள்ள இறக்குமதிகள் இந்திய உற்பத்தியால் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
சர்வதேச பிராண்டுகள்
அனைத்து முன்னணி இந்திய பிராண்டுகளும், இந்தியாவில் உள்ள சர்வதேச பிராண்டுகளும் 20 முதல் 60 சதவீதம் வரையிலான ஆடைகளை வங்கதேசத்திலிருந்து பெறுகின்றன. இந்த பிராண்டுகளின் விநியோகச் சங்கிலிகள் மற்றும் பல குறு சிறு மற்றும் நடுத்த நிறுவன பிரிவுகள் குறுகிய காலத்தில் பாதிக்கப்படும்.
வாங்குபவர்களின் விநியோக சங்கிலி தற்காலிகமாக சீர்குலையும் மற்றும் அதிக செலவு, அதிக காலம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். வரி இல்லாத நன்மை காரணமாக இந்திய நிறுவனங்கள் வங்கதேசத்திலிருந்து நெய்த மற்றும பின்னப்பட்ட ஆடைகளை இறக்குமதி செய்து வருகின்றன.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications