இந்தியாவின் ராஜதந்திரம்.. இனி கச்சா எண்ணெய், எரிவாயுக்கு நோ டென்ஷன்!

ஈரான் போர், உக்ரைன் போர் என கடந்த 4-5 ஆண்டுகளாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையில் தொடர்ந்து சப்ளை பிரச்சனை இருந்து வரும் வேளையில், வெளிநாட்டு ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்கும் இந்தியா அதிரடியான முயற்சிகளை எடுத்து சப்ளையர் எண்ணிக்கையை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

ராஜிய சபாவில் எழுப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு சார்ப்பில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் மாநில அமைச்சரான சுரேஷ் கோபி கொடுத்த பதிலில், மத்திய அரசு உலக நாடுகளில் அடுத்தடுத்து உருவாகியுள்ள போர் சூழ்நிலையில் எரிபொருள் சப்ளையை உறுதி செய்யும் வரையில், திரவ இயற்கை எரிவாயுக்குவான சப்ளையர் எண்ணிக்கையை 6ல் இருந்து 15 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்தியாவின் ராஜதந்திரம்.. இனி கச்சா எண்ணெய், எரிவாயுக்கு நோ டென்ஷன்!

இதேபோல் கச்சா எண்ணெய்கான சப்ளையர் நாடுகளின் எண்ணிக்கையை 27ல் இருந்து 41 ஆக உயர்த்தப்பட்டு உள்ளதாக எழுத்துப்பூர்வமாக சுரேஷ் கோபி தெரிவித்தார். அதிகப்படியான நாடுகளில் இருந்து எரிபொருள் பெறுவது மூலம் சப்ளை பிரச்சனை மட்டும் அல்லாமல் விலை உயர்வு பிரச்சனையையும் தவிர்க்க முடியும் எனவும் ராஜிய சபாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் வெடித்த போது ஐரோப்பாவுக்கான சப்ளை பாதிக்கப்பட்டது, அதன் பின்பு ரஷ்யாவின் எண்ணெய் இருப்பை இந்தியாவுக்கு, சீனாவுக்கும் திரும்பி விடப்பட்டாலும் அமெரிக்காவின் தடை உத்தரவால் மீண்டும் வளைகுடா நாடுகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் உருவானது.

அடுத்தாக அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் ஆசியா முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளை பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்து கடந்த 5 வருடத்தில் எரிபொருள் சப்ளை சார்ந்த பிரச்சனை இருந்து வரும் வேளையில் மத்திய அரசு தனது சப்ளையர் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது மூலம் இனி போர் காலத்திலும் தடையில்லா சப்ளை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எரிவாயுவுக்கு 15 நாடுகளும், கச்சா எண்ணெய்க்கு 41 நாட்கள் என சிறிதும், பெரிதுமாக இந்தியா புதிய சப்ளையர்களை தேடி பிடித்திருக்கும் காரணத்தால் ஒரு நாட்டை, ஒரு வழித்தடத்தை நம்பியிருக்கும் நிலை இனி இல்லை.

இதேவேளையில் மத்திய அரசு எரிபொருள் இறக்குமதியை குறைக்க எத்தனால் கலப்பு, பியோகேஸ் உற்பத்தி போன்றவற்றை பெரிய அளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது மத்திய அரசு. இதன் மூலம் இறக்குமதி செலவுகளை குறைப்பது மட்டும் அல்லாமல் டாலர் இருப்பையும் குறைக்க முடியும்.

மத்திய அரசு E25 பெட்ரோலுக்கான சோதனையை துவங்கியிருந்தாலும், மக்களின் எதிர்ப்பு E20க்கு கடுமையாக இருக்கும் காரணத்தால் கலப்பின அளவை அதிகரிப்பதில் தாமதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் உபரியாக இருக்கும் எத்தனால் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முயற்சியல் மத்திய அரசும், தனியார் நிறுவனங்களும் இறங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+