இந்தியாவில் நிறைய தொழிலதிபர்கள் தங்களது நிறுவனத்தை சிறிய அளவில் துவங்கி பின்னர் படிப்படியாக ஒரு மாபெரும் தொழில் சாம்ராஜ்ஜியமாக வளர்த்துள்ளனர். அதன் பின்னர் தங்கள் நிறுவனத்தை அடுத்த தலைமுறையினர் வசம் ஒப்படைத்துச் செல்வர்.
அப்படித்தான் சுனீதா ரெட்டி தனது தந்தையின் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அப்போலோ மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநராக சுனீதா ரெட்டி இருக்கிறார். அவரது தந்தையும், கார்டியாலஜிஸ்ட்டுமான பிரதாப் ரெட்டி 1983 ஆம் ஆண்டில் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.

அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பிய டாக்டர் பிரதாப் ரெட்டி இந்த நிறுவனத்தை உருவாக்கினார். போர்ப்ஸ் கணிப்பின்படி 2024 ஜனவரி 1 ஆம் தேதியின்படி அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.23300 கோடி ஆகும்.
அவரது மகள் சுனீதா ரெட்டி 1989 ஆம் ஆண்டிலிருந்து அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அவரது தலைமையின் கீழ் ஒருங்கிணைந்த ஹெல்த்கேரில் முன்னோடியாக அந்த மருத்துவமனை திகழ்கிறது.
அப்போலோ மருத்துவமனைகளின் சந்தை மதிப்பு ரூ.82492 கோடி ஆகும்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இளங்கலை பப்ளிக் ரிலேஷன்ஸ், எக்கனாமிக்ஸ், மார்க்கெட்டிங் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
பைனான்சியல் இன்ஸ்டிட்டியூட் ஆப் பைனான்சியல் மேனேஜ்மெண்ட் அண்டு ரிசர்ச் நிறுவனத்தில் பைனான்சியல் மேனேஜ்மெண்ட்டில் டிப்ளமோ படித்துள்ளார்.
அமெரிக்காவின் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் ஓனர்/பிரசிடெண்ட் மேனேஜ்மெண்ட் புரோகிராம் முடித்துள்ளார். சேஜ் பல்கலைக்கழகத்தில் லைப் சயின்ஸ் பாடத்தில் சுனீதா ரெட்டி கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
எப்போதும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவேண்டும் என்று நினைக்கும் சுனீதா ஒரு பேலன்ஸ்டு டயட்டை பின்பற்றுகிறார். சிஐஐ ஹெல்த்கேர் கவுன்சிலின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அவரது தொழிலில் பலதரப்பட்ட கிரீன்ஃபீல்டு மற்றும் பிரவுன்ஃபீல்டு புராஜக்ட்களை பார்த்துள்ளார்.
ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலின் இந்திய ஆலோசனை வாரியத்திலும் ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் அட்வைசரி போர்டிலும் சுனீதா உறுப்பினராக உள்ளார்.
அப்போலோ மருத்துவமனையில் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய பின்னர் அப்போலோ ஹாஸ்பிடல் எண்டர்பிரைசஸின் சிஇஓவாக சுனீதா ரெட்டி நியமிக்கப்பட்டார். அவரது ஆண்டு வருவாய் ரூ.67.20 மில்லியன்கள் ஆகும். 36.8 சதவீதம் போனஸ் உண்டு.
இந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக விளங்கும் அப்போலோ மருத்துவமனையில் 10,000க்கும் மேற்பட்ட படுக்கை வசதி உள்ளது. 73 மருத்துவமனைகள் உள்ளன. 5000க்கும் மேற்பட்ட பார்மஸிகள், 300 கிளினிக்குகள், 1100க்கும் மேற்பட்ட டயாக்னாஸ்டிக்ஸ் சென்டர்கள், 200க்கும் அதிகமான டெலிமெடிசின் யூனிட்டுகளும் உள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications