இந்தியாவில் பெப்ஸிகோவுக்குத் தேவையான பாட்டில்களை வருண் பெவரேஜஸ் தயாரித்து அளிக்கின்றது. பெப்ஸி விற்பனை பல மடங்கு அதிகரித்து வருவதால் வருண் பெவரேஜஸ் நிறுவனத்தின் பாட்டில் உற்பத்தி மற்றும் விநியோகமும் அதேவேகத்தில் வளர்ந்து வருகிறது.
அமெரிக்காவுக்கு வெளியே பெப்சிகோ சாப்ட்டிரிங்க் கம்பெனியின் இரண்டாவது பெரிய பாட்டிலிங் கம்பெனியாக வருண் பெவரேஜஸ் உள்ளது. எவ்வளவு பாட்டில்கள் தேவையென்றாலும் அதை உடனடியாகத் தயாரித்து தரும் அளவுக்கு தனது பேக்டரி வசதிகளை வருண் பெவரேஜஸ் அமைத்துள்ளது.

இந்திய கோலா மன்னன் என்றழைக்கப்படும் ரவிகாந்த் ஜெய்ப்பூரியா மார்வாடி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அமெரிக்காவில் பிசினஸ் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு 1985 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பி வந்தார். மேற்படிப்பை புதுதில்லியில் மதுரா சாலையில் உள்ள டிபிஎஸ்-இல் படித்தார். பின்னர் அவரது குடும்பத் தொழிலான பெப்சி கோலாவின் பாட்டில் தயாரிப்பில் அவர் இணைந்தார்.
RJ Corp நிறுவனரும் தலைவருமான ரவிகாந்த் ஜெய்ப்பூரியா-வின் நிகர சொத்து மதிப்பு 2023 ஆம் ஆண்டில் 6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் வருண் பெவரேஜஸ் பங்குகளின் ஐபிஓ வெளியானதில் இருந்து அதன் விலை 18 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ரவிகாந்த் ஜெய்ப்பூரியாவின் சொத்து மதிப்பும் அதிகரித்து விட்டது.
இதன்மூலம் நாட்டின் மிகப் பெரிய வங்கியாளரான உதய் கோட்டக்கை இந்திய கோலா மன்னன் ரவிகாந்த் ஜெய்ப்பூரியா சொத்து மதிப்பில் மிஞ்சி விட்டார். எஃப்எம்சிஜி துறையில் உள்ள வருண் பெவரேஜஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,63,418.38 கோடி ஆகும்.
இந்திய பில்லியனரான தொழிலதிபர் ரவிகாந்த் ஜெய்ப்பூரியாவுக்கு 15.1 பில்லியன் நிகர சொத்துகள் உள்ளன.
ஆர்ஜே நிறுவனத்தின் தலைவராக உள்ள அவர் வருண் பெவரேஜஸ் மற்றும் தேவயாணி இண்டர்நேஷனல் நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார்.
பிரபல ஹோட்டல் செயின் லெமன் ட்ரீ, ஹெல்த்கேர் நிறுவனமான மெதாந்தாவிலும் சிறிய அளவு பங்குகளை வைத்திருக்கிறார்.
ஜெய்ப்பூரியாவின் தேவயாணி இண்டர்நேஷனல் நிறுவனம் கேஎப்சி, பீட்சா ஹட், கோஸ்டா காபி ஸ்டோர்களை நடத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications